இந்திரா கணேசன் செவிலியர் கல்லூரியில்
செவிலியர் தின விழா
உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு இந்திரா கணேசன் செவிலியர் கல்லூரி சார்பாக இன்று செவிலியர் தின விழா நடைபெற்றது. இந்திரா கணேசன் கல்வி நிறுவன செயலாளர் திரு. ராஜசேகரன் மற்றும் இயக்குநர் முனைவர் திரு.பாலகிருஷ்ணன் வழிகாட்டுதலில் நடைபெற்ற இவ்விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே தொடங்கியது.

பேராசிரியர் வரலக்ஷ்மி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். பேராசிரியர் முனைவர் கீதா, யோகா (ம) அறிவியல் கல்லுரி முதல்வர் அவர்கள் இந்த ஆண்டிற்க்கான செவிலியர் தின கருப்பொருளை (“Our Nurses. Our Future. Empowered Nurses Save Lives” – “எங்கள் செவிலியர்கள், எங்கள் எதிர்காலம் – அதிகாரமளிக்கப்பட்ட செவிலியர்கள் உயிர்களை காப்பாற்றுகின்றனர்.”) பற்றி உரையாற்றினார். பதிவாளர் முனைவர் அனுசுயா அவர்கள் செவிலிய தின வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து கல்லூரி முதல்வர் பேராசிரியர் அம்பிகா அவர்கள் செவிலியர்களின் அர்ப்பணிப்பு, மற்றும் மனிதநேயம் பற்றி வாழ்த்துரை வழங்கினார்.

இவ்விழாவிற்க்கு திருமதி. உஷா ரமணி, தாய் செய் நல அலுவலர், திருச்சி மாவட்டம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மருத்துவ சேவையில் செவிலியர் வகிக்கும் முக்கிய பங்கை எடுத்துரைத்தார். “நோயாளிகளின் நம்பிக்கையின் தூண்கள் செவிலியர்களே” என அவர் பாராட்டி சிறப்புரையாற்றினார். மேலும் பல்வேறு விதமான மருத்துவம் சார்ந்த போட்டிகள் நடை பெற்று பரிசுகள் வழங்கப்பட்டன. நிறைவாக முனைவர் சலோமி சங்கீதா அவர்கள் நன்றி கூறினார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments