Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

“உதயசூரியன்”க்கு வாக்கு கோரி முசிறி முழுவதும் கதிரவன் இன்று சூறாவளி பயணம்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளரான மண்ணச்சநல்லூர் S. கதிரவன் BE., அவர்கள் இன்று (14.04.2026) முசிறி கிழக்கு ஒன்றியத்தில் தேர்தல் பிரச்சாரப் பயணத்தை மேற்கொள்கிறார். மாலை 4.00 மணி முதல் இரவு 9.20 மணி வரை நடைபெறும் இந்த பிரச்சாரம், தொகுதி முழுவதும் பல்வேறு ஊராட்சிகள் மற்றும் கிராமங்களை இணைத்து நடைபெற உள்ளது.
இந்த பிரச்சாரப் பயணம் தின்னனூர் பகுதியில் மாலை 4.00 மணிக்கு துவங்கி, தொடர்ந்து சாக்கத்தூர், குப்பமாணியம், இராம்பபுரம்,

தின்னனூர் பகுதிகள் வழியாக 5.00 மணிவரை நடைபெறுகிறது. பின்னர் புளிவலம், பழவமலை, பெருமாள்கோவில், முள்ளைநகர், சிறுகுடி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மாலை 5.10 மணி முதல் 5.50 மணி வரை பிரச்சாரம் நடைபெறுகிறது. தொடர்ந்து பெரமங்கலம் ஊராட்சி பகுதிகளில் 6.00 மணி முதல் 6.30 மணி வரை மக்களை சந்தித்து ஆதரவு கோர உள்ளார்.
அதனைத் தொடர்ந்து காட்டுக்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 6.40 மணி முதல் 7.00 மணி வரை பிரச்சாரம் நடைபெறுகிறது. பின்னர் உடையாம்பட்டி, சிறுகனங்குடி, காட்டுக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் 7.10 மணி முதல் 7.40 மணி வரை பயணம் தொடர்கிறது. இறுதிக்கட்டமாக மூவானூர் மற்றும் வேங்கை மண்டலம் ஊராட்சிகளில் 7.50 மணி முதல் இரவு 9.20 மணி வரை நடைபெறும் இந்த சூறாவளி பிரச்சாரம் நிறைவு பெறுகிறது.
இந்த பிரச்சாரத்தின் போது வேட்பாளர் S. கதிரவன் அவர்கள் அரசின் சாதனைகள் மற்றும் எதிர்கால திட்டங்களை மக்களிடம் எடுத்துரைத்து, திமுகவின் “உதயசூரியன்” சின்னத்திற்கு வாக்களித்து தன்னை வெற்றி பெறச் செய்யுமாறு வாக்காளர்களிடம் நேரடியாக வேண்டுகோள் விடுக்கிறார்.

மேலும் இந்த சுற்றுப்பயணத்தில் உள்ளூர் நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு உற்சாக வரவேற்பு அளிக்கத் தயாராக உள்ளனர்.மொத்தத்தில், இந்த சூறாவளி பிரச்சாரம் முசிறி தொகுதியில் தேர்தல் சூழலை மேலும் சூடுபிடிக்கச் செய்யும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*

*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
*Instagram*
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy

*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *