கடந்த 25.04.2018-ந்தேதி இரவு கோட்டை காவல் நிலைய
எல்லைக்குட்பட்ட பெரிய சௌராஷ்டிரா தெருவில் பட்டபகலில்
வீட்டினுள் புகுந்து நகைகள் திருடப்பட்டதாக பெறப்பட்ட புகாரின் பேரில்

வழக்குப்பதிவு செய்தும் வழக்கின் எதிரியான வாளவந்தான் நகரை
சேர்ந்த சார்லஸ் 38/26 த.பெ.ஜோசப் வின்சென்ட் என்பவரை கைது
செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கின் புலன் விசாரணை விரைந்து முடிக்கப்பட்டு, மேற்படி
எதிரிகள் மீது குற்றப்பத்திரிக்கையை புலன் விசாரணை அதிகாரி
கடந்த 25.10.2018-ந்தேதி மாவட்ட நீதித்துறை நீதிமன்றம்-1-ல் தாக்கல்
செய்தார்கள். இவ்வழக்கை விசாரித்த நீதித்துறை

நடுவர்-1 திருச்சி அவர்களால் இன்று 04.06.26-ந்தேதி மேற்படி
வழக்கின் எதிரி சார்லஸ் என்பவருக்கு இரண்டு ஆண்டுகள்
சிறைதண்டனை மற்றும் ரூ.2,000/- அபராதம் விதித்து தீர்ப்பு
வழங்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு சாட்சிகளை குறித்த
காலத்தில் ஆஜர்படுத்தியும், இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிக்கு
தண்டனை பெற்றுத்தந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல்
ஆளிநர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி,
இ.கா.ப., வெகுவாக பாரட்டினார்கள்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav




Comments