Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருவெறும்பூர் தொகுதியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தீவிர வாக்குச் சேகரிப்பு

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, இன்று தனது தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
வாக்குச் சேகரித்த பகுதிகள்
இன்று காலை திருவெறும்பூர் வடக்கு

ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவர் மக்களிடையே கலந்துரையாடி இறுதி கட்ட வாக்கு சேகரிப்பு பணியை தொடர்ந்தார்.
பனையக்குறிச்சி, கீழ முல்லக்குடி, ஒட்டக்குடி, முத்தாரசபுரம்.வேங்கூர், கீழ முறுக்கூர், நடராஜபுரம், அரசங்குடி.
மேல விளாங்குளம், கீழ விளாங்குளம் மற்றும் வாழவந்தான் கோட்டை.
கூத்தாப்பர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகள்.

பிரச்சாரத்தின் போது அமைச்சர் பேசுகையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பலத்தையும், அரசின் சாதனைகளையும் விளக்கி உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் ஆதரவையும் சுட்டிக்காட்டி, தன்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்தார்.

இந்த பிரச்சார நிகழ்வில்
தலைமைச் செயற்குழு உறுப்பினர் சேகரன்.
திருவெறும்பூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் கருணாநிதி.மதிமுக நிர்வாகிகள் வெள்ளமண்டி சோமு, மளவை தமிழ்மாணிக்கம்.
ஒன்றியச் செயலாளர் திருமாவளவன்.
மற்றும் கூட்டணி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.

*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
*Instagram*
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *