அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் பொறியாளர் க.ராஜசேகரன் தொகுதி மேம்பாட்டிற்கான குறைந்தபட்ச செயல் திட்டங்கள் “என் மண்! என் மக்கள்! என் தொகுதி!” என்ற தாரக மந்திரத்துடன் முன்வைக்கப்படுகின்றன. நமது தொகுதி மேம்படுத்தப்பட்ட சுற்றுலா மையமாக மாற்றப்படும் என்றும், அதன் ஒரு படி நிலையாக மலைக்கோட்டைக்கு ரோப்கார் வசதி ஏற்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. காந்தி

மார்கெட் இடமாற்றம் செய்யப்படாது, மாறாக அது மேலும் முறைப்படுத்தி நவீனமயமாக்கப்படும். போக்குவரத்து நெரிசலை குறைக்க உரிய ஆய்வுகள் மேற்கொண்டு சர்வதேச தரத்தில் தார் சாலைகள், உயர்மட்ட பாலங்கள் மற்றும் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். இல்லம் தோறும் குடிநீர் என்ற மத்திய அரசின் உயரிய திட்டத்தின் மூலம் தொகுதியில் உள்ள அனைத்து இல்லங்களுக்கும் குழாய் மூலம் தூய்மையான குடிநீர் வழங்க முயற்சி மேற்கொள்ளப்படும்.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை பெருக்கும் விதமாக திருச்சி கிழக்கு தொகுதியில் ஐடி பார்க் அமைக்கப்படும் மற்றும் அரசு, தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு பெற ஆவண செய்யப்படும். நமது தொகுதியில் IAS, IPS உள்ளிட்ட அகில இந்திய தகுதி தேர்வுகளுக்குத் தகுதியான ஆசிரியர்கள் மூலம் கட்டணமில்லா பயிற்சி வழங்கப்படும். கழக தேர்தல் அறிக்கையின்படி +2 முடிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி தொடர்ந்து வழங்கப்படும் மற்றும் அவர்கள் உயர்கல்வி தொடர கட்டணமில்லா உயர்கல்வி வழிகாட்டி மையம் அமைக்கப்படும். மகளிர் நலப்

பிரிவு ஏற்படுத்தப்பட்டு, மகளிருக்குக் கட்டணமில்லாமல் சிறந்த தையல் பயிற்சி வழங்கப்பட்டு, பயிற்சியின் முடிவில் நவீன தையல் மிஷின் விலையில்லாமல் வழங்கி அவர்கள் சுய தொழில் முனைவோராக மாற்றப்படுவர்.
மக்களுக்கு மிக குறைந்த கட்டணத்தில் RO குடிநீர் ATM மையம் அமைத்துத் தூய்மையான குடிநீர் வழங்கப்படும். பெண்களுக்கான பாதுகாப்பு மிகுந்த பகுதியாக மாற்ற அதிக அளவு மகளிர் காவல் ரோந்து வாகனங்கள் மற்றும் அதிநவீன சிசிடிவி கட்டமைப்பு ஏற்படுத்தப்படும். சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு போதை இல்லா இளைய சமுதாயம் உருவாக்கப்படும். அரசு மருத்துவக் காப்பீடு இல்லாத பொதுமக்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் கட்டணமில்லாமல் வழங்கப்படும் மற்றும் அதிநவீன மருத்துவ பரிசோதனை கூடம் நிறுவப்பட்டு அடிப்படையான பரிசோதனைகள் கட்டணமில்லாமல் வழங்கப்படும். இளையோர் நலன் காக்க Indoor மற்றும் Outdoor விளையாட்டு அரங்குகள் கட்டமைக்கப்படும் மற்றும் பூங்காக்கள் தூய்மையாகப் பராமரிக்கப்படுவதோடு புதிய பூங்காக்கள் உருவாக்கப்படும்.
முக்கியமான இடங்களில் பொது கழிவறைகள் அமைத்துச் சமூக ஆர்வலர்கள் மூலம் தூய்மையாக நிர்வகிக்கப்படும் மற்றும் அனைத்து வகை வாகன நிறுத்தும் இடங்களுக்கு உரிய கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படும். சட்டமன்ற உறுப்பினர

அலுவலகத்தில் இஸ்லாமிய, கிறிஸ்துவ மற்றும் அனைத்து சகோதர சகோதரிகளின் அரசு சார் கோரிக்கைகளுக்கு ஒரு மாதத்திற்குள் தீர்வு கிடைக்க ஆவண செய்யப்படும். குடியிருப்பு பகுதிகளுக்கான பட்டா பிரச்சினைகள் தீர்க்கப்படும் மற்றும் வெளியூர் நபர்கள் தங்கிச் செல்ல விடுதி வசதி ஏற்படுத்தப்படும். அம்மா உணவகம் அதிக இடங்களில் அமைத்து மக்களின் உணவுத் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். ஹஜ், ஜெருசலம் மற்றும் காசி புனித பயணங்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்படும். உய்யகொண்டான் வாய்க்கால் மற்றும் துணை வாய்கால்கள் குடிமராமத்து செய்து தூய்மையாகப் பாதுகாக்கப்படும். 23.04.2026 அன்று நடைபெறவுள்ள தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு வேட்பாளர் க.ராஜசேகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments