Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சியில் இன்று நீட் தேர்வு: 11 மையங்களில் 6,688 மாணவர்கள் எழுதுகின்றனர்!

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், 2026 மே 3 ஆம் தேதி மதியம் 02.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET UG – 2026) நடைபெற உள்ளது. இந்தத் தேர்விற்கான மையங்களாகப் பல்வேறு கல்வி நிறுவனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மெயின் ரோட்டில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் பிட் (BIT) வளாகத்தில் அமைந்துள்ள பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியின் மையம் ‘B’ மற்றும் மையம்

‘A’ ஆகிய ஒவ்வொன்றிற்கும் தலா 600 மாணவர்கள் ஒதுக்கப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மெயின் ரோட்டில் பெல் (BHEL) நிறுவனம் அருகில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் (NIT) மையம் ‘B’ மற்றும் மையம் ‘A’ ஆகிய இரண்டிற்கும் தலா 600 மாணவர்கள் வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திருச்சிராப்பள்ளி திண்டுக்கல் சாலை, கருமண்டபம் எல்.ஐ.சி (LIC) அலுவலகத்திற்கு எதிரே உள்ள நேஷனல் கல்லூரியின் (தன்னாட்சி) மையம் ‘A’ மற்றும் மையம் ‘B’ ஆகிய ஒவ்வொன்றிற்கும் தலா 600 மாணவர்கள் ஒதுக்கப்பட்டுள்ளனர். மண்ணச்சநல்லூர் எதுமலை சாலையில் அரசு மருத்துவமனைக்கு எதிரே அமைந்துள்ள அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு 600 மாணவர்களும், லால்குடி பேருந்து நிலையம் அருகில் திருச்சி மெயின் ரோட்டில் அமைந்துள்ள சிறுதையூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு 600

மாணவர்களும் ஒதுக்கப்பட்டுள்ளனர்.
மேலும், வயலூர் சாலை புத்தூரில் உள்ள பிஷப் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மையம் ‘B’ மற்றும் மையம் ‘A’ ஆகிய ஒவ்வொன்றிற்கும் தலா 600 மாணவர்கள் வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர். காஜாமலை ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் (தன்னாட்சி) மையம் ‘A’-விற்கு 496 மாணவர்களும், அதே கல்லூரியின் மையம் ‘B’-விற்கு 192 மாணவர்களும் ஒதுக்கப்பட்டுள்ளனர். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மொத்தம் 6688 மாணவர்கள் இந்தத் தேர்வை எழுத உள்ளனர்.


https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *