திருச்சி மாவட்டம் சமயபுரம் மரியம்மன் தகோயிலில் இன்று (21.04.2026) உண்டியல் திறப்பு நடைபெற்றது. கோயில் துணை ஆணையர், செயல் அலுவலர் உள்ளிட்ட அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்றன.

இந்த உண்டியல் திறப்பில் கோயில் பணியாளர்கள் மற்றும் தொடர்புடைய பணியாளர்களும் பங்கேற்றனர். பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தொகைகள் கணக்கிடப்பட்டதில், ரொக்கம் ரூ.1,27,61,104 வசூலாகியுள்ளது. மேலும், 1 கிலோ 208 கிராம் பொன், 2 கிலோ 726 கிராம் வெள்ளி, 134 அயல்நாட்டு ரூபாய் நோட்டுகள் மற்றும் 520 அயல்நாட்டு நாணயங்களும் கிடைத்துள்ளன.

கடந்த 09.04.2026 அன்று நடைபெற்ற உண்டியல் திறப்பிற்குப் பிறகு இன்று உண்டியல் திறப்பு நடைபெற்றது.
*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
*Instagram*
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments