Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

தவெக தலைவர் விஜய் வெற்றி பெற்று கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்ய மக்கள் விடமாட்டார்கள்- கு.ப கிருஷ்ணன்

தவெக தலைவர் விஜய் வெற்றி பெற்று கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்ய மக்கள் விடமாட்டார்கள்.அதிமுகவினர் 2,5,10ஆயிரம் டோக்கன் மற்றும் காசோலை வினியோகம் பறிமுதல் – கு ப கிருஷ்ணன்.

திருச்சி லால்குடியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கு ப கிருஷ்ணன் தேர்தல் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ் 500 ரூபாய், ஆயிரம் ரூபாய் என அச்சடிக்கப்பட்ட கூப்பன்களை விநியோகம் செய்து அதில் 5000 ரூபாய் பத்தாயிரம் ரூபாய்க்கு என்ன பொருளை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் என கியூ ஆர் கோடுடன் விநியோகிக்கின்றனர் இதை பறிமுதல் செய்துள்ளோம். தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளோம். ஜனநாயகத்தை நம்பாமல் பணநாயகத்தை இரண்டு கட்சியும் நம்புகிறார்கள். மக்கள் தமிழக வெற்றி கழகத்திற்கு வாக்களித்து ஜனநாயகத்தை வெற்றி பெற செய்வார்கள் என்றார்.

எந்த தேர்தலிலும் பார்க்காத அளவுக்கு இந்த முறை வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் பட்டுவாடா நடைபெறுவதாக குற்றம் சாட்டினார். மேலும் தன்னை 20 கோடி ரூபாய்க்கு விலைக்கு வாங்கி விட்டதாக அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ் குற்றச்சாட்டை முன்வைத்து அதனை பரப்பி வருகின்றனர். இந்த பொய்யான குற்றச்சாட்டை பரப்புவதை கண்டிப்பதாகவும் குறிப்பிட்டார். இந்த முறை இரண்டு கட்சிகளும் பணப்பட்டுவாடா செய்தாலும் அதையும் தாண்டி மைக்ரோ லெவலில் பரப்புரை சென்று குடும்பத்திற்குள் உள்ள அனைவரும் தமிழக வெற்றி கழகத்திற்கு வாக்களிக்க தயாராகிவிட்டனர். திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வெற்றி பெற்றால் ராஜினாமா செய்து விடுவதாக பரப்புரை செய்கிறார்கள்.

இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்று கிழக்கு தொகுதியை அவரை ராஜினாமா செய்ய மக்கள் விடமாட்டார்கள் என நம்பிக்கை தெரிவித்தார். மற்றொரு தொகுதியை எங்கள் தலைவர் ராஜினாமா செய்து கொள்ளட்டும் என குறிப்பிட்டார்.
*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
*Instagram*
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy

*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *