2026-தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் அஞ்சல் வாக்குகள் வழங்கப்பட்டு, தேர்தல் பணியாற்றும் அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட அஞ்சல் வாக்குகளை உரிய சட்டமன்ற தொகுதிக்கு அனுப்புவதில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு, அஞ்சல் வாக்குகள் சம்மந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பிரித்து வழங்கிட பொதுவான சிறப்பு மையம் அமைத்திட திருச்சிராப்பள்ளி மாவட்டம் தேர்வு செய்யப்பட்டது. இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி, பொதுவான சிறப்பு மையம் திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கத்தில் அமைக்கப்பட்டது.

கடந்த 02.04.2026 அன்று தமிழ்நாட்டிலுள்ள 38 மாவட்டங்களை சேர்ந்த அலுவலர்கள் இம்மையத்திற்கு வருகைபுரிந்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் சம்மந்தப்பட்ட மாவட்டங்களை சேர்ந்த ஒருங்கிணைப்பாளர்களிடம் அஞ்சல் வாக்குகள் தொடர்பான படிவம் 12ம் மற்றும் கடந்த 13.04.2026 அன்று வாக்குப்பதிவு செய்யப்படாத அஞ்சல் வாக்குகளும் வழங்கப்பட்டன. அதனை தொடர்ந்து 20.04.2026 அன்று வாக்குப்பதிவு செய்யப்பட்ட அஞ்சல் வாக்குகளும் பிரித்து வழங்கப்பட்டது.

மேலும், தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்களால் வாக்குப் பதிவு செய்யப்பட்ட அஞ்சல் வாக்குகள் பிரித்தளித்திடும் பொருட்டு. இன்று (28.04.2026) காலை 09.30 மணி முதல் பொதுவான சிறப்பு மையமான திருச்சிராப்பள்ளி கலையரங்கத்தில் இந்த பணியினை கூடுதல் தலைமை தேர்தல் அலுவலர் திரு.அ.சிவஞானம் இ.ஆ.ப. அவர்கள் திருச்சிராப்பள்ளி மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன்,இ.ஆ.ப. அவர்கள் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.

இந்த பொதுவான சிறப்பு மையத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த தொடர்புடைய மாவட்ட தேர்தல் அலுவலர்களால் நியமனம் செய்யப்பட்ட பொறுப்பு அலுவலர்கள் வருகை தந்து, தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களிலும் வாக்குப்பதிவு செய்யப்பட்ட அஞ்சல் வாக்குகள் சம்மந்தப்பட்ட மாவட்டங்களில் நியமனம் செய்யப்பட்டுள்ள ஒருங்கிணைப்பு அலுவலர்களிடம் பிரித்து வழங்கப்பட்டது. மேற்கண்டுள்ள நிகழ்வில் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் அஞ்சல் வாக்குகளை கவனிக்கும் தொடர்பு அலுவலர்கள். வேட்பாளர்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments