திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியம், க.பாளையம் ஊராட்சி கிளியனூர்பட்டி கிராமத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் நாற்றங்கால் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் மரக்கன்றுகளை பாதுகாப்பு செய்து பராமரிக்கப்பட்டு வரும் செயல்பாடுகளையும், பொன்னுசங்கம்பட்டி கிராமத்தில் கிராமப்புற கட்டிட பராமரிப்பு திட்டத்தின் கீழ் ரூ.98 ஆயிரம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி கட்டிடம்

புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருவதையும், வீரமச்சான்பட்டி ஊராட்சியில் 15-வது நிதி சுகாதார மானிய திட்டத்தின் கீழ் ரூ.65 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீரமச்சான்பட்டி வட்டாரவள ஆய்வகத்தின் கட்டுமானப் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைவாகவும்,தரமானதாகவும் முடித்திட சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும்,பொன்னுசங்கம்பட்டி ஊராட்சி, கே.பாளையம் கல்லிக்குடியில் ஒன்றிய பொது நிதி திட்டத்தின் கீழ் ரூ.5 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிமென்ட் கான்கிரிட் நடைபாதையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, மதுராபுரி ஊராட்சியில் ஒருங்கிணைந்த ஒதுக்கீட்டு வருவாயின் திட்டக்கூறு திட்டத்தின் கீழ் ரூபாய் 5.54 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய

அலுவலகக் கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளையும், துறையூரில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் மூலம் பொதுப்பணித்துறை சார்பில் ரூபாய் 4.90 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலகத்தினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்வுகளில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர்கள், பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments