Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

FIR போட ₹1,500 லஞ்சம்: திருச்சி சிறப்பு உதவி ஆய்வாளருக்கு சிறை மற்றும் அபராதம்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுக்கா, T.களத்தூரைச் சேர்ந்த திரு.மணிமாறன் என்பவர் திருச்சி சிங்காரதோப்பில் உள்ள MRI காம்ப்ளக்ஸில் தையல்கடை நடத்தி வந்துள்ளார். மணிமாறன் உடல்நிலை சரியில்லாமல் கடையை பூட்டிவிட்டு சொந்த ஊரில் இருந்தபோது தையல் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு திருட்டு நடந்துள்ளது.
இது தொடர்பாக கடந்த 21.07.2009ம் தேதி திருச்சி மாநகரம், கோட்டை குற்ற பிரிவு காவல் நிலையம் சென்று அங்கு பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.முத்துகுமார் என்பரிடம் மணிமாறன் புகார்மனு கொடுத்துள்ளார். புகாரை

 

வாங்கிக்கொண்டு ஒரு வாரம் கழித்து வரசொன்னதன்பேரில், மணிமாறன் கடந்த 30.07.2009 ம்தேதி முத்துகுமாரை சந்தித்து தனது புகார் பற்றி கேட்டுள்ளார். அப்போது சிறப்பு உதவி ஆய்வாளர் முத்துகுமார், புகாரின் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்து நடவடிக்கை எடுக்க, மணிமாறனிடம் ரூ.1,500/- லஞ்சமாக கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத மணிமாறன் திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் கடந்த 31.07.2009ந்தேதி கொடுத்த புகாரின்பேரில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து 01.08.2009ந் தேதி மேற்கொள்ளப்பட்ட பொறிவைப்பு நடவடிக்கையில், ரசாயண பவுடர் தடவப்பட்ட லஞ்சப்பணம் ரூ.1,500/-ஐ முத்துகுமார் கேட்டுப் பெற்ற போது திருச்சி லஞ்ச ஒழிப்பு போலிசாரால் அவர் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்து இன்று 29.04.2026 ந்தேதி திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி திரு.புவியரசு அவர்கள் தீர்ப்பளித்தார். அதன்படி,

முத்துகுமாருக்கு லஞ்சம் கேட்ட குற்றத்திற்காகவும் மற்றும் சட்டப்படியான கடமையை செய்ய லஞ்சம் பெற்ற குற்றத்திற்காகவும் தனித்தனியாக தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் மற்றும் மொத்தம் ரூ.20,000/- அபராதமும் விதித்து, இந்த தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இவ்வழக்கினை DSP திரு.மணிகண்டன் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் திரு.கோபிகண்ணன் ஆகியோர் திறம்பட நடத்தி குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்றுத் தந்துள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *