திருச்சியில் கிருஷ்ணன் கோவில் பூட்டை உடைத்து விநாயகர் சிலை திருட்டு – போலீசார் விசாரணை திருச்சி பீமநகர் பகுதியில் அமைந்துள்ள பழமைவாய்ந்த ஸ்ரீ ஆதி காளிகாம்பாள் ஸ்ரீ வேணுகோபாலகிருஷ்ணன் கோவில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும், பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்வது வழக்கம்.

இந்நிலையில் கோவில் அர்ச்சகர் கிஷாந்த் மனோஜ் வழக்கம்போல பூஜைகளை முடித்துவிட்டு, இரவு கோவில் நடையை சாத்திவிட்டு சென்று, காலை கோவிலைத் திறந்து பார்த்தபோது, கருவறையில் இருந்த சுமார் 3 அடி உயரமுள்ள பிரதோஷ விநாயகர் சிலை காணாமல் போனது கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.

சிலை திருடு போனது குறித்து கோவில் அர்ச்சகர் உடனடியாக அறநிலையத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தார். இதையடுத்து, கோவில் செயல் அலுவலர் செங்குலத்தான், இது தொடர்பாக செசன்ஸ் கோர்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கோவிலின் பூட்டை உடைத்துச் சிலை திருடிய மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி, தப்பியோடிய குற்றவாளிகளைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav






Comments