திருச்சியில் 16 டாஸ்மார்க் கடைகள் மூட திட்டம் – முதல் கடையாக முக்கியமான இடத்தில் உள்ள கடை மூடல்

பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்த பேருந்து நிலையம் பள்ளி கல்லூரிகள் ஆலயங்கள் உள்ளங்களுக்கு அருகில் இருக்கும் டாஸ்மார்க் மதுபான கடைகளை மூட கோரிக்கை பல ஆண்டுகளாக எழுந்து வந்தது அதிரடியாக இன்று காலை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தமிழக முழுவதும் 717 டாஸ்மார்க் கடைகளை மூட உத்தரவிட்டார் இதில் திருச்சி 16 கடைகள் மூடப்படுகின்றன. முதலில் மூடப்பட்டுள்ள கடை திருச்சி கலைஞர் அறிவாலயம் எதிரே உள்ள எலைட் ஷாப் டாஸ்மாக் மதுபான கடை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மீதமுள்ள கடைகள் தொடர்ந்து ஆய்வு நடத்தி ஒவ்வொன்றாக மூடப்படும் என டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments