Tribal Counsellor பணிக்கு விண்ணப்பிக்கலாம்- மாவட்ட ஆட்சியர்

Jul 3, 2025 - 18:12
Jul 3, 2025 - 18:13
 0  804
Tribal Counsellor பணிக்கு விண்ணப்பிக்கலாம்- மாவட்ட ஆட்சியர்

திருச்சிராப்பள்ளி மாவட்ட சுகாதார சங்கம் மூலம் துறையூர் மற்றும் உப்பிலியாபுரம் பகுதிகளுக்கான சிக்கள்செல் மற்றும் தலசீமியா மரபணு சாத்தியகூறு மற்றும் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனை வழங்க ஒரு Tribal Counsellor பணியிடம் ரூ.18,000/- மாத ஊதிய அடிப்படையில் முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.

மேற்காணும் பணியிடத்திற்கு விண்ணப்பம் மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலகம், ரேஸ் கோர்ஸ் ரோடு, ஜமால் முகமது கல்லூரி அருகில், T.V.S. டோல்கேட், திருச்சிராப்பள்ளி என்ற முகவரியிலுள்ள அலுவலகத்தில் வருகின்ற 10.07.2025 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

 இத்தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர்  வே.சரவணன் இ.ஆ.ப.அவர்கள் தெரிவித்துள்ளார். 

What's Your Reaction?

Like Like 2
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 1
Wow Wow 2