திருச்சி காந்தி மார்க்கெட் வெங்காயம் மண்டி பகுதிகளில் அழகி போன வெங்காயங்கள், பூண்டு விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி டாக்டர். ரமேஷ் பாபு தலைமையிலான அதிகாரிகள் நேற்று திடீரென காந்தி மார்க்கெட் வெங்காயம் மண்டி பகுதிகளில் ஆய்வில் ஈடுபட்டனர்.
 அப்போது இரண்டு கடைகளில் அழுகிய நிலையில் வெங்காயம் பூண்டு உட்பட 30 மூட்டைகளில் அழுகிப்போன காய்கறிகள் பொதுமக்களின் விற்பனைக்காக வைத்திருந்தது உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் சோதனையில் கண்டறியப்பட்டது.

பின்னர் அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து அதனை காந்தி மார்க்கெட் அருகே உள்ள செயலாக்கம் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அழிக்கப்பட்டது. இந்தத் தொடர் அதிரடி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் சோதனையால் காந்தி மார்க்கெட் வெங்காய மண்டி பகுதியில் வியாபாரிகளின் மத்தியில் திடீரென பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
 மேலும் காய்கறி வியாபாரிகளுக்கு அழகிய பொருட்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக விற்பனை செய்யக்கூடாது என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ரமேஷ்பாபு எச்சரிக்கை விடுத்தார்.
மேலும் காய்கறி வியாபாரிகளுக்கு அழகிய பொருட்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக விற்பனை செய்யக்கூடாது என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ரமேஷ்பாபு எச்சரிக்கை விடுத்தார்.
 #திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO

 29 Oct, 2025
29 Oct, 2025                           42
42                           
 
 12 July, 2022
 12 July, 2022

Comments