திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பூமாலைப்பட்டியில் வசித்து வருபவர் சுப்பிரமணியன் (60). இவர் ஓய்வு பெற்ற சுகாதாரத்துறை அலுவலர். இவரது மகன் ராஜா (45). இவர் கடந்த 10 ஆண்டுகளாக லண்டனில் வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது திருப்பூரில் உள்ள நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை அவரது வீட்டில் திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்ற அனுமதியுடன் டெல்லியிலிருந்து வந்த 6 சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில், குழந்தைகளின் ஆபாச வீடியோவை பதிவிறக்கம் செய்வது, வெளிநாட்டிற்கு பதிவேற்றம் செய்தது என இணையத்திலிருந்து பணம் பெற்றதாக வந்த புகாரின் பேரில் விசாரணை மற்றும் சோதனை நடைபெற்று வருகிறது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO







Comments