திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ளது எச் இ பி எஃப் தொழிற்சாலை இங்குள்ள டவுன்ஷிப் வளாகத்தில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் பிரசன்னா. இவரது மாமனார் கணேசன் (80). இவர் துப்பாக்கி தொழிற்சாலையில் பணிபுரிந்து ஓய்வு பெற்று உடல் நலமின்றி இருந்து வந்தார்.

இவரது மனைவி கண்ணம்மாள் (70), உடல்நலமின்றி இருந்து வந்த கணவரை கவனித்து வந்திருந்தார். இந்நிலையில் கணேசன் இறந்துவிட்டார் அருகில் இருந்து இதனைப் பார்த்த மனைவி கண்ணம்மாள் அதிர்ச்சியில் அடுத்த பத்து நிமிடத்தில் மயங்கி இறந்து விட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இறந்து போன கணவன் மனைவி இருவரையும் திருச்சி ஓயாமாரி மயானத்தில் தகனம் செய்தனர். இறந்து போன கணவன் மனைவி இருவருக்கும் சொந்த ஊர் ஊட்டி பணி மாற்றம் காரணமாக திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் பணிக்கு வந்திருந்து. இப்பகுதியில் வசதித்து வந்தார்கள்.

இவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். கணவன் இறந்த பத்தே நிமிடத்தில் மனைவியும் இறந்தது அப்பகுதியில் பேசும் பொருளாக மாறி உள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision




            
            
            
            
            
            
            
            
            
            


Comments