திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஜம்புநாதபுரம் காவல்நிலையம் எல்லையில், பெருமாள் @ விஜயகுமார் மேலத்தோட்டியபட்டி, முசிறி என்ற இடத்தில் வசித்து வருகிறார். இவர் தனது மற்றும் பக்கத்து வீட்டு நாய்களிடம் பூனையை தூக்கி வீசி, கடித்து காயம் ஏற்பட செய்துள்ளார். இதனால் அந்த பூனை உயிரிழந்தது.


மேலும், இந்த சம்பவத்தை போனில் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். வீடியோ வைரலானதையடுத்து, விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக, வளவந்தி மேற்கு கிராமத்தின் வி.ஏ.ஓ., சபாபதி, ஜம்புநாதபுரம் காவல் நிலையத்தில் (31.03.24) அன்று புகார் அளித்தார். இதன் அடிப்படையில் அந்த நபர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து பெருமாள் (எ) குற்றவாளி கைது செய்யப்பட்டு (12.04.2024) வரை முசிறி கிளை சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். வழக்கு விசாரணையில் உள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய….
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments