திருச்சி மாவட்ட காவல்துறை அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….. நீதிமன்ற பெண் ஊழியர்களையும், பெண் காவலர்களையும் மிகவும் தரக்குறைவாக, கேவலமாக சித்தரித்த சவுக்கு சங்கர் மற்றும் அவனுடைய முக்கிய கூட்டாளி பீலிக்ஸ் ஜெரால்ட் மீது காவல்துறை அதிரடி நடவடிக்கை.

அந்த இரு கயவர்களுடைய/பொறுக்கிகளுடைய கைதுக்காகவும் வழிக்காவல் பணிக்காகவும், முழுக்க முழுக்க பெண் காவலர்கள் மட்டுமே அடங்கிய குழுவை நியமித்தது தமிழக காவல்துறை. அந்த இரு குற்றவாளிகளுக்கும் இதைவிட ஒரு தகுந்த பாடம் புகட்ட முடியாது.

இந்த அதிரடி நடவடிக்கையால் , நீதிமன்றத்தில் உள்ள பெண் ஊழியர்களுக்கும், பெண் போலீசாருக்கும் மிகுந்த தன்னம்பிக்கையும் உற்சாகமும் ஏற்பட்டுள்ளது. பெண் என்றும் அடிமையில்லை, பெண் என்றுமே மோகப் பொருள் இல்லை.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments