திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் ஊட்டத்தூர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் பாக்கியம் (80). இவர் தனியாக வசித்து வந்துள்ளார். மேலும் இவர் நீரிழிவு மற்றும் இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இரத்த அழுத்த நோயால் அவதிப்பட்டு வந்த மூதாட்டி பாக்கியம் மன உளைச்சல் அடைந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று தனக்குத் தானே உடலில் மண்ணெண்ய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் அவருக்கு 70 சதவீதம் தீக்காயம் ஏற்ப்பட்டது. இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டார் என கூறினர். பின்னர் இச்சம்பவம் குறித்து காணக்கிளியநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உள்ள காந்திநகரைச் சேர்ந்தவர் துரைராஜ். கணவன் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக துரைராஜ் தனது மனைவியை கடந்த 4 ஆண்டுகளாக பிரிந்து தனது சகோதரருடன் வசித்து வந்துள்ளார். மனைவி பிரிந்து சென்றதால் மன உளைச்சலில் இருந்த துரைராஜ் வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவலறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           4
4                           
 
 
 
 
 
 
 
 

 11 June, 2024
 11 June, 2024





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments