திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் லீமா ரோஸ் மார்ட்டின் போட்டியிடுகிறார்.
இவர் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் செய்ய செல்லும் பொழுது கோவை மாவட்டத்திலிருந்து அவரது நிறுவனத்தில் பணிபுரியும் ஆட்களை கொண்டு பிரச்சாரம் செய்து வருவதாகவும் அதிக அளவு அதிமுகவினருக்கும் வாக்காளர்களுக்கும் பணம் செலவு செய்வதாக கூறப்படுகிறது.

மேலும் லால்குடி சட்டமன்ற தொகுதியில் ஹார்ட் பாக்ஸ் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்துள்ள நிலையில் தற்போது வாக்காளர்களுக்கு தொகுதி முழுவதும்
வாக்காளர்களுக்கு 25 ஆயிரம் டோக்கன் வினியோகம் செய்வதற்காக 10 பேர் 2 ஆட்டோவில் மாந்துறை பகுதியில் சென்ற போது தவெக கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்த போது தப்பியோடி உள்ளனர்.

10 பேரும் தப்பி ஓடி உள்ளனர். அப்பகுதியில் 100-க்கும் மேற்பட்டோர் தப்பி ஓடியவர்களை கைது செய்ய வேண்டும் என அதே பகுதியில் நின்றுள்ளனர்.மாந்துறை பகுதியில் 10க்கும் மேற்பட்ட போலீசார் இருப்பதால் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.குறிப்பாக வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யக்கூடாது பரிசு பொருள்கள் கொடுக்கக் கூடாது என மாவட்ட நிர்வாகம் சார்பில் பல விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் தற்போது அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ் அவருக்கு ஆதரவாக கோவை மாவட்டத்தில் இருந்து ஆட்களை வரவழைக்கப்பட்டு 25 ஆயிரம் டோக்கன் விநியோகம் செய்யப்படுவது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

மேலும் லீமா ரோஸ் வெற்றி பெற்றால் அவர் கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் அவரை நாங்கள் எப்படி சந்திக்க முடியும் என லால்குடி தொகுதியை சேர்ந்த தெரிவித்திருந்த நிலையில் வாக்காளர்களுக்கு 25 ஆயிரம் டோக்கன் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ் ஆதரவாக பணம் கொடுப்பதை தடுக்க வேண்டும் இது தொடராமல் இருக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
*Instagram*
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav
லால்குடியில் டோக்கன் விநியோகம் சர்ச்சை – அதிமுக வேட்பாளர் மீது குற்றச்சாட்டு



Comments