திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், சென்னையில் இருந்து தனி விமானத்தில் நாளை மதியம் 2.00 மணியளவில் திருச்சிக்கு வருகிறார்.
திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட விமான நிலையம் அருகே வயர்லெஸ் சாலை, கே.கே.நகர் பேருந்து நிலையம், கொட்டப்பட்டு ஆகிய இடங் களில் திறந்தவெளிவாகனத்தில் நின்றபடியே பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.
மேலும், விமானநிலையம், வயர்லெஸ் சாலை, கே.கே.நகர், காஜாமலை, கோழிப்பண்ணை சாலை, கொட்டப்பட்டு, விமான நிலையம் வரை சாலையில் வலம் வருகிறார்.
தவெக தலை வர் விஜய் பிற்பகல் 3.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை தேர்தல் பிரச்சாரம் செய்ய முறைப் படி தேர்தல் ஆணையம் மற்றும் காவல் துறையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
இதற்கான அனுமதியை 27 கட்டுப்பாடுகளுடன் மாநகர காவல் துறையினர் வழங்கியுள்ளனர்..
*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments