Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

மதசார்பற்ற கூட்டணிக்காக துறையூரில் ராகுல் காந்தி பிரச்சாரம்

திருச்சி துறையூரில் நடைபெறும் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் ராகுல் காந்தியுடன் மதசார்பற்ற கூட்டணி கட்சியை சேர்ந்த 9 வேட்பாளர்கள் பங்கேற்பு.திருச்சி துறையூர் முசிறி பிரிவு சாலை அருகே தனியார் இடத்தில் இன்று 4 மணி அளவில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பரப்புரையாற்ற வருகிறார். முன்னதாக சென்னையில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்து ஹெலிகாப்டர் மூலம் திருச்சி துறையூரில்

ஜமீன்தார் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடு தளத்தில் இறங்கி சாலை மார்க்கமாக பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்து சேர்கிறார். இந்த பொதுக்கூட்ட மேடையில் மதசார்பற்ற கூட்டணி கட்சியை சேர்ந்த திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒன்பது சட்டமன்றத் தொகுதியில் உள்ள வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை ஆற்றுகிறார். கூட்டத்திற்கு அமைச்சர் நேரு, பெரம்பலூர் எம்பி அருண் நேரு உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

9 வேட்பாளர்களும் நாளை துறையூரில் ராகுல் காந்தி கலந்து கொள்ளும் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்பார்கள் என அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் விச்சு லெனின் பிரசாத் தெரிவித்துள்ளார். இவர்தான் துறையூர் தனித் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
*Instagram*
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *