Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி கிழக்கில் 19ஆம் தேதி விஜய் ரோடு ஷோ – அதே நாளில் முதல்வர் பரப்புரைக்கு மனு – விசிகவும் பரப்புரை – பரபரப்பு

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் நிலையில் அவர் பிரச்சாரத்திற்கு வரவில்லை என்று தொடர்ந்து அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பினர். ஆனால் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் நாங்கள் கேட்கும் நேரத்தில் மற்றவர்களும் பரப்புரை அனுமதி கேட்டு வேண்டுமென்றே விண்ணப்பித்து எங்கள் அனுமதியை கிடைக்க விடாமல் செய்கின்றனர் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தனர். இன்று காலை தமிழக வெற்றிக்கழக டெல்டா மண்டல கண்காணிப்பாளர் கு.ப கிருஷ்ணன் செய்தியாளர்களிடம்

 

தெரிவித்த போது …வருகிற 19ஆம் தேதி எங்கள் தலைவர் திருச்சி கிழக்கில் பரப்புரை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்து உள்ளோம் என்று குறிப்பிட்டார்.தற்போது 19ஆம் தேதி திருச்சி கிழக்கு தொகுதியில் மதியம் 3 மணி முதல் 6 மணி வரை பரப்புரை மேற்கொள்ள அனுமதி மாநகர காவல்துறையினர் வழங்கியுள்ளது.திருச்சி விமான நிலையத்திலிருந்து வயர்லெஸ் ரோடு, கேகே நகர் பேருந்து நிலையம் ,
தென்றல் நகர், காஜாமலை,அண்ணா விளையாட்டு அரங்கம், கோழிப்பண்ணை, கொட்டப்பட்டு வழியாக திருச்சி விமான நிலையம் வரை சாலை வலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதே நாளில் அதே பகுதிகளில் இரவு எட்டு மணியிலிருந்து பத்து மணி வரை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் திறந்த வேனில் நின்று திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜுக்கு வாக்குகளை சேகரிக்கிறார். அவருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதை விட முக்கியமாக திருச்சி கிழக்கில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் காலை 8 மணி முதல் 10 மணி வரை பாலக்கரை,மரக்கடை காந்தி சந்தை உள்ளிட்ட பகுதிகளில் பரப்புரை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்திடம் இணையதளத்தில் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க தகவலாக பார்க்கப்ப்டுகிறது.

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் ஏற்கனவே சுப்ரமணியபுரம் பாலக்கரை மரக்கடை பழைய பால்பண்ணை உள்ளிட்ட கிழக்கு தொகுதி பகுதிகளில் பர்ப்புரை ரோடு ஷோ வழியாக மேற்கொண்ட நிலையில் மீண்டும் அப்பகுதியில் அனுமதி வழங்கவில்லை திருச்சி கிழக்கு தொகுதி உச்சகட்ட பரபரப்பில் உள்ளது. திருச்சி கிழக்கில் விஜய் பரப்புரைக்கு வரும் அதே நாளில் திமுக தலைவரும் கூட்டணிக் கட்சி சேர்ந்த திருமாவளவனும் கிழக்கு தொகுதியில் பரப்புரை மேற்கொள்வது அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது.


திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *