திருச்சிராப்பள்ளி மாவட்டம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) அவர்களின் அலுவலக பயன்பாட்டிலிருந்த ஈப்பு (ஈப்பு எண்:TN.45 G.1388) முதிரா நிலையில் கழிவு நீக்கம் செய்யப்பட்ட கீழ்கண்ட விபரப்படி உள்ள ஈப்பினை 04.06.2026 அன்று காலை 11.00 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், 3வது தளத்தில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சிப் பிரிவு) அலுவலகத்தில் பகிரங்க ஏலம் விடப்படும். ஏலம் கோர முன் வருபவர்கள் மேற்கூறிய தேதியில் நேரில் ஆஜராகி பின்வரும்

நிபந்தனைகளுக்குட்பட்டு ஏலம் கோரிட இதன்வழி தெரிவிக்கப்படுகிறது. வ.எண் 1, TN. 45 G 1388 – Bolero ஈப்பின் அரசின் மதிப்பு ரூ. 5, 77,000/- ஆகும்.
ஏலம் பெற விருப்பமுள்ளவர்கள் ஏலம் முன்வைப்புத் தொகை ரூ.10,000/- மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), திருச்சிராப்பள்ளி அலுவலகத்தில் நேரில் செலுத்திட வேண்டும். வைப்புத் தொகையை ரொக்கமாக 04.06.2026 காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை மட்டுமே செலுத்தி டோக்கன் பெற்றுக்கொள்ள வேண்டும். அதன்பிறகு, எக்காரணத்தை முன்னிட்டும் டோக்கன் வழங்கப்படமாட்டாது மற்றும் அரசு நிர்ணயம் செய்த தொகைக்கு குறைவாக ஏலம் கோரக் கூடாது. ஏலம் விடவுள்ள வாகனத்தை அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நேரில் வந்து பார்த்துக் கொள்ள

அனுமதிக்கப்படுகிறது. ஏலத்தொகை அதிகம் கோரியவர் ஏலதொகையுடன் 18 சதவிகிதம் GST வரி ஆகியவற்றினை மொத்தமாக ஏலம் நடைபெறும் நாளன்று மாலை 4.00 மணிக்குள் ரொக்கமாக செலுத்தப்பட வேண்டும். செலுத்த தவறும் பட்சத்தில் ஊர்ஜித ஆணை ரத்து செய்து மறு ஏலம் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஏலம் ஊர்ஜிதம் செய்த பின்னர் மேற்கூறிய கழிவு நீக்கம் செய்யப்பட்ட வாகனம் ஏலதாரரிடம் ஒப்படைக்கப்படும். மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989, விதி 52(A)(2)-இல் குறிப்பிட்டுள்ளபடி பொது ஏலம் விடப்பட்ட ஈப்பினை பிறருக்கு உரிமை மாற்றம் செய்ய இயலாது. ஏலம் முடிந்தவுடன் அதிகதொகைக்கு ஏலம் கோரியவருக்கு ஏல ஊர்ஜித ஆணை வழங்கப்படும் மற்றும் ஏலத்தினை உறுதி செய்தவர் தனது சொந்த செலவில் ஏலம் எடுத்த

வாகனத்தை எடுத்து செல்ல வேண்டும். ஏலத்தை ரத்து செய்யவோ அல்லது ஒத்திவைக்கவோ மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) அவர்களுக்கு முழு அதிகாரம் உண்டு என தெரிவிக்கப்படுகிறது. மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன்,இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments