திருச்சிராப்பள்ளி மாவட்டம், கல்லக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மால்வாய் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த 21.04.2023 அன்று அவரது வீட்டில் தனியாக இருந்த போது ஆனந்தராஜ் 25/23, த.பெ. செல்வராஜ், நடுத்தெரு, மால்வாய், லால்குடி தாலுகா, திருச்சி மாவட்டம் என்பவர் மேற்படி சிறுமியின் வீட்டிற்கு அத்துமீறி நுழைந்து, பாலியல் நோக்கத்துடன் அச்சிறுமியை அணுகியுள்ளார். இதற்கு அச்சிறுமி மறுத்தபோது மேற்படி ஆனந்தராஜ் அச்சிறுமியை இழிவான வார்த்தைகளால் திட்டியம், அவரிடம் தவறாகவும் நடந்து கொள்ள

முயற்சித்ததாக பாதிக்கப்பட்ட சிறுமி கொடுத்த புகாரின் பேரில் லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குற்ற எண். 13/23, U/s 11 (i) (iv), 12 of POCSO Act r/w 451 IPC – படி 05.05.2023 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டு, எதிரி கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். இவ்வழக்கின் விசாரணையானது திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
மேற்படி வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக செல்வி. பிரியா, ஆஜராகி வாதிட்டு வந்த நிலையில் இன்று (12.05.2026) திருச்சி மகிளா நீதிமன்ற நீதிபதி திருமதி. சண்முகபிரியா அவர்கள் எதிரி – ஆனந்தராஜ் 25/23, த.பெ. செல்வராஜ், நடுத்தெரு, மால்வாய், லால்குடி தாலுக்கா, திருச்சி மாவட்டம் என்பவருக்கு 02 ஆண்டுகள் சிறைதண்டனையும், ரூபாய். 1,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

மேலும், இவ்வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்று தர நீதிமன்ற நடவடிக்கைகளை சரிவர கவனித்த லால்குடி மகளிர் காவல் நிலைய நீதிமன்ற பெண் தலைமை காவலர் திருமதி. சோபியா என்பவரை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ. செல்வநாகரத்தினம், இ.கா.ப அவர்கள் வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டியுள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments