Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி கிழக்கில் திமுக தலைவர் போட்டியா?

திருச்சி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் கழகத் தலைவர் தலைமையில் சென்னை அறிவாலயத்தில் இன்று காலை நடந்து முடிந்ததை தொடர்ந்து இன்று மாலை திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட கழக அவைத் தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் நடைபெற்றது.

கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன தலைவருக்கு நன்றி: உதயநிதி ஸ்டாலின் அவர்களைச் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக நியமித்ததற்காகக் கழகத் தலைவருக்கு இந்தச் செயற்குழு நன்றி தெரிவிக்கிறது.

மகளிர் உரிமைத் தொகை: பெண்களுக்கான உரிமைத் தொகையை மே 15-ஆம் தேதி (நாளை) வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, தமிழக முதல்வர் உடனடியாக அதனை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

வாக்காளர்களுக்கு நன்றி:
திருச்சி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மணப்பாறை ஆகிய மூன்று தொகுதிகளில் கழக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்குச் செயற்குழு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

எதிர்க்கட்சித் தலைவருக்குப் பாராட்டு: சட்டமன்றத்தில் தமிழக அரசின் திட்டங்கள் குறித்தும், அளித்த வாக்குறுதிகள் (மகளிர் உரிமைத் தொகை ₹2500 ஆக உயர்வு, இலவசப் பேருந்து பயணம், 6 சிலிண்டர்கள் போன்றவை) குறித்தும் கேள்வி எழுப்பி, மக்கள் நம்பிக்கையைப் பெறும் வகையில் செயல்பட்ட எதிர்க்கட்சித் தலைவருக்குப் பாராட்டு மற்றும் வாழ்த்துகள் தெரிவிக்கப்படுகிறது.

இக்கூட்டத்தில் மாநகரக் கழகச் செயலாளர்
மு மதிவாணன், மாநிலங்கள்ளவை உறுப்பினர் கவிஞர் சல்மா,
தலைமை செயற்குழு உறுப்பினர் வண்ணை அரங்கநாதன், சேகரன், சபியுல்லா, மாவட்ட அவைத்தலைவர் கோவிந்தராஜ், மாநில அணி நிர்வாகி செந்தில் மற்றும் மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர் கழகச் செயலாளர் அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .

முன்னாள் தமிழ்நாட்டின் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்தார் இந்நிலையில் கட்சியின் தலைவர் தோல்வியடைந்த நிலையில் தொண்டர்கள் நிர்வாகிகள் அனைவரும் மீண்டும் திமுக தலைவரை ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட வைத்து வெற்றி பெற செய்ய வைக்க வேண்டுமென கருத்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில் திருச்சியில் திமுக தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிட சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *