திருச்சி மின்பகிர்மான வட்டம் / பெருநகரம் / திருச்சியின் கணினி தரவு வழங்கிகளை
மேம்படுத்தும் பணி திருச்சி மண்டலத்தில் நடைபெறுவதால் இணையவழி சேவை நிறுத்தம் தொடர்பான

செய்தியை மேற்கண்ட பார்வையின் வாயிலாக பொதுமக்கள் மற்றும் மின்நுகர்வோர் நலன் கருதி
செய்தியினை தங்கள் நாளிதழில் வெளியிட கேட்டுக் கொள்ளப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கட்டணக் கடைசி தேதி 16.05.2026 உள்ள மின்நுகர்வோர்களின் நலன்
கருதி இணையவழி மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ள செய்தியினை
கீழ்க்கண்டவாறு தங்கள் நாளிதழில் வெளியிட அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், நுகர்வோர் சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் ‘கணினி தரவு
வழங்கிகளை படிப்படியாக புதிதாக மேம்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், திருச்சி
மண்டலத்தில் உள்ள அலுவலக இணையவழி மின்கட்டண செலுத்தும் மற்றும் புதிய மின்சார இணைப்பு விண்ணப்ப
சேவைகள் 16.05.2026 (சனிக்கிழமை) காலை 06:00 மணி முதல் 17.05.2026 (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11:59 மணி
வரை இயங்காது.

கட்டணக் கடைசி தேதி 16.05.2026 அன்று உள்ள நுகர்வோர்களின் வசதிக்காக, கால அவகாசம்
மேலும் ஒரு நாள் 18.05.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, திருச்சி மண்டல நுகர்வோர் அதற்கேற்ப
திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இடையூறுக்கு வருந்துகிறோம்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments