திருச்சி மாவட்டம், சோமரசம் பேட்டை அருகே, அதவத்துார் சக்தி நகரை சேர்ந்தவர் மூர்த்தி(72). இவரது முதல் மனைவி பிருந்தாதேவி இறந்து விட்டார். இரண்டாவது மனைவி லதாவுக்கு பிரபாகரன் (32), கீர்த்தனா (27), என்ற மகளும் உள்ளனர். லதாவும், பிரபாகரனும் உறவினர் வீட்டு விசேஷத்துக்கு சென்று விட்டு, மாலையில் வீடு திரும்பியுள்ளனர். அப்போது, வீட்டில் மூர்த்தி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார். அருகில், மகள் கீர்த்தனா முகத்தில் வெட்டுக் காயங்களுடன் மயங்கிக் கிடந்துள்ளார்.
 ரத்தக் கறையுடன் அரிவாளும் கிடந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சோமரசம் பேட்டை போலீசார், கீர்த்தனாவை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பினர். தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில், குடும்பத் தகராறு காரணமாக, மகளை வெட்டி விட்டு, மூர்த்தி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம், என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மூர்த்தி தற்கொலை செய்து கொள்வதற்க்கு முன் மகளின் ரத்தத்தை மிதித்து இன்னொரு அறைக்கு சென்று தற்கொலை செய்து கொண்ட தடயம் இருப்பதாக காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. மகள் கீர்த்தனா பேச முடியாமல் ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/F2UyA1Y1JhlIdUVAiKp85h
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

 31 Oct, 2025
31 Oct, 2025                           64
64                           
 
 01 October, 2021
 01 October, 2021

Comments