திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடி குண்டு மிரட்டல்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம் பள்ளி கல்லூரிகள் என பல இடங்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை அவ்வப்போது வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வந்தது ஆனால் அவை எல்லாம் வதந்தி என தெரியவந்துள்ளது.கடந்த சில மாதங்களாக வெடிகுண்டு மிரட்டல் ஏதும் விடுக்கப்படாமல் இருந்த நிலையில் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது திருச்சி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பிரதிக் தயாள் இன்று காலை பொறுப்பேற்று கொண்டார்.
இந்த நிலையில் அவருடைய மின்னஞ்சலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது இது குறித்து அவர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்

நாளை திருச்சி மாவட்டத்திற்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் வரவுள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ள வெடிகுண்டு மிரட்டல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav





Comments