Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

மலைக்கோட்டை தெப்பக்குளம் தூர்வாரும் பணி பூமிபூஜையுடன் தொடக்கம்

திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை தாயுமான சுவாமி திருக்கோவில் தெப்பக்குளம் தூர்வாரும் பணி பூமிபூஜையுடன் தொடங்கியது

திருச்சிராப்பள்ளிக்கு பெருமை சேர்க்கும் மலைக்கோட்டை அருள்மிகு தாயுமான சுவாமி திருக்கோவிலின் தெப்பக்குளத்தை சுற்றிலும் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, இன்றைய தினம் தூர்வாரும் பணியானது பூமி பூஜையுடன் தொடங்கியது.

 

என்எஸ்பி சாலையில் உள்ள 20,984 சதுர மீட்டர் பரப்பளவும், 3.50 மீ ஆழமும், 73,444 கனமீட்டர் கொள்ளளவும் கொண்ட இந்த தெப்பக்குளமானது கடந்த 1995ஆம் ஆண்டு தூர்வாரப்பட்ட நிலையில், அதன் பின்னர் தெப்பக்குளத்தை சுற்றிலும் ஆக்கிரமிப்புகள் மற்றும் தெப்பக்குளத்தில் கழிவுநீர் கலக்கப்பட்டதாலும், தெப்பக்குளம் மாசடைந்து துர்நாற்றம் எழுந்த நிலையில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் உயிர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் தெப்பக்குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு இன்றையதினம் திருச்சிராப்பள்ளி மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பின் பங்களிப்புடன் 25 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணியானது இன்று தொடங்கி வைக்கப்பட்டது. தெப்பக்குளத்தில் உள்ள தண்ணீர் முழுவதுமாக அகற்றப்பட்டநிலையில் இன்றையதினம் மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மலைக்கோட்டை தாயுமானசுவாமி திருக்கோயில் செயல்அலுவலர் அவருட்செல்வன், கண்காணிப்பாளர் பாண்டியம்மாள், பேஸ்கார் பாஸ்கர், வணிகர் சங்க பேரவை மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு ஆகியோர் முன்னிலையில் பூமிபூஜை நடைபெற்று பின்னர் தூர்வாரும் பணி தொடங்கி வைக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாநகராட்சி ஆணையர் மதுபாலன் கூறுகையில்… திருச்சி மாநகராட்சி மூலம் உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் தெப்பக்குளத்தை சுற்றிலும் பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, வணிகர்சங்க பேரவை பங்களிப்புடன் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தூர்வாரும் பணி தொடங்கியுள்ளதாக இதற்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றியிணை தெரிவித்துக் கொண்டார்.தெப்பக்குளத்தைச் சுற்றிலும் உள்ள பகுதிகள் வியாபாரத்திற்கு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, காலம் காலமாக இங்கு வியாபாரம் செய்து வந்த வணிகர்களுக்கு மாற்றிய இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது, இந்த தெப்பக்குளத்தை அழகுபடுத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கொண்டுவரும் நோக்கில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, நடைபாதை அழகுபடுத்தப்பட்டு மாலை வேலைகளில் பொதுமக்கள் நடை பயிற்சி சென்று அமர்வதற்கும் எதுவாக அம்சங்களை கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

ஒளி ஒலி கண்காட்சி தெப்பக்குளத்தில் நடைபெற்று வருகிறது, மேலும் படகு சவாரி செய்வதற்கும் அரசுடன் ஆலோசித்து அதனை மேற்கொள்ள பரிசீலனை செய்யப்படும் மேலும் தெப்பக்குளத்தைச் சுற்றிலும் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களை தடுக்க போலீசார் உடன் கலந்து ஆலோசித்து ரோந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்

பேட்டி ; திரு.மதுபாலன் – திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர்

குறிப்பு படக்காட்சி திருச்சி எப் டி பி

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *