போக்குவரத்து பாதிப்பு, ஊராட்சி செயலர் பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டம் கைவிடப்பட்டது..

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே கிளியனூர் பட்டியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர், அப்பகுதியில் சில தினங்களாக குடிநீர் பிரச்சனை ஏற்பட்டு வருவதாக ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர், ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாத நிலையில் துறையூர் முதல் முசிறி செல்லும் நெடுஞ்சாலையில் கண்ணனூர் பாளையம் பிரிவு ரோட்டில் கிளியனூர்பட்டி கிராம பொதுமக்கள் சில தினங்களாக குடிநீர் பிரச்சனை ஏற்படுவதாக கூறி சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது, சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற போராட்டத்தில் கண்ணனூர் பாளையம் ஊராட்சி செயலர் சாமிவேல், மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது, போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு, அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது..

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav






Comments