பேருந்துகள் மாற்று வழிப்பாதை:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 01.06.2026 அன்று திருச்சிராப்பள்ளி மாநகரத்திற்கு வருகை புரிவதால் காலை 10.00 மணி முதல் மத்திய பேருந்து நிலையம் மற்றும் திருவெறும்பூரிலிருந்து சத்திரம் பேருந்து நிலையத்திற்கு செல்லும் மாநகர பேருந்துகள் அனைத்தும் மாநகரடை வழியாக பெயின்கார்டு கேட் வழியாக சின்ன அருணை பாலின் கீழ் “வி” ரோடு அருண்சாலை (WR) வழியாக செல்ல வேண்டும். திருவெறும்பூரிலிருந்து வழியாக வரும் பேருந்துகள் அனைத்தும் மாம்பழசாலையில் இறங்கி விட்டு திரும்பி செல்ல வேண்டும். கரூர் சாலையிலிருந்து வரும் பேருந்துகள் சத்திரம் பேருந்து நிலையத்திற்கு செல்லாமல் கே.டி சத்திரப்பு, சாலத்திரி சாலை வழியாக மத்திய பேருந்து நிலையம் செல்ல வேண்டும். கடலூர், பொம்மபாடி, அரியலூரிலிருந்து வரும் பேருந்துகள் திருவானைக்கோவில் வழியாக சத்திரம் பேருந்து நிலையத்திற்கு செல்லாமல் கோணலூர் மதுரை சாலை வழியாக மத்திய பேருந்து நிலையம் செல்ல வேண்டும். சத்திரம் பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் செல்ல அனுமதியில்லை.

கனரக வாகனங்கள் மாற்று வழிப்பாதை
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 01.06.2026 அன்று திருச்சிராப்பள்ளி மாநகரத்திற்கு வருகை புரிவதால் காலை 07.00 மணி முதல் மதனையிலிருந்து சென்னை செல்லும் கனரக வாகனங்கள் துவரங்குறிச்சியிலிருந்து மணப்பாறை, குளித்தலை, முசிரி பிராணூர் வழியாகவும், திண்டுக்கலிலிருந்து சென்னை செல்லும் கனரக வாகனங்கள் மாம்பழமறையிலிருந்து குளித்தலை, முசிரி, பெரம்பலூர் வழியாகவும், சென்னையிலிருந்து மதுரை, திண்டுக்கல் செல்லும் கனரக வாகனங்கள் பெரம்பலூரிலிருந்து முசிரி, குளித்தலை, மணப்பாறை வழியாக செல்ல வேண்டும். தஞ்சாவூர், புதுக்கோட்டை செல்லும் கனரக வாகனங்கள் பெரம்பலூரிலிருந்து அரியலூர் வழியாக செல்ல வேண்டும். புதுக்கோட்டையிலிருந்து சென்னை செல்லும் கனரக வாகனங்கள் தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர் வழியாக செல்ல வேண்டும். தஞ்சாவூரிலிருந்து கன்னூர் செல்லும் கனரக வாகனங்கள் அரியலூர், பெரம்பலூர், துவரை வழியாக செல்ல வேண்டும். சூரூரிலிருந்து தஞ்சாவூர் செல்லும் கனரக வாகனங்கள் குளித்தலை, முசிரி, பெரம்பலூர், அரியலூர் வழியாக செல்ல வேண்டும் எனதெரிவிக்கப்படுகிறது.

பிரதிக் தாயல் இ. ஆ. ப,மாவட்ட ஆட்சித்தலைவர் திருச்சிராப்பள்ளி அவர்கள் தெரிவித்துள்ளார்.
வெளியீடு:
உ.தவி இயக்குநர்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,
திருச்சிராப்பள்ளி.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments