தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி பல கேலி கிண்டல்களை தாண்டி 108 இடங்களில் வெற்றி வாகை சூடிய தமிழக வெற்றி கழகம் தற்பொழுது ஆட்சி அமைக்க முடியுமா என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுகிறது. கண்டிப்பாக தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்க முடியும் என அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 108 இடங்களை தனியாக கைப்பற்றியுள்ள தமிழக வெற்றி கழகம் இரண்டு இடங்கள் போக 106 சட்டமன்ற உறுப்பினர்களை தன்வசம் வைத்துள்ளது. விஜய் இரண்டு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் ஒன்றை ராஜினாமா செய்ய வேண்டும்.மற்றொன்று

சபாநாயகருக்கான ஒன்று .234 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட தமிழ்நாடு சட்டமன்றம் தமிழக வெற்றி கழகம் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க மற்ற கட்சிகளின் தயவு தேவையில்லை எப்படி இது சாத்தியம் என கேள்வி எழுப்பிய பொழுது 234 சட்டமன்ற உறுப்பினர்களில் உதாரணத்திற்கு அன்று சட்டமன்றத்திற்கு வந்திருக்கக் கூடிய சட்டமன்ற உறுப்பினர்களில் 50 சதவீதம் பிளஸ் 1 என்ற விகிதத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். ஒருவேளை அதிமுக இதில் பங்கேற்காமல் சென்று விட்டால் சட்டமன்றத்தில் உள்ள உறுப்பினர்களின் 50 சதவீதம் பேர் வாக்களிக்க வேண்டும்.அப்படி இருக்கும் பொழுது தமிழக வெற்றி கழகத்திடம் 106 சட்டமன்ற உறுப்பினர்கள் கைவசம் உள்ளனர்.

அப்படியே 234 சட்டமன்ற உறுப்பினர்களும் உள்ளே இருந்தால் தமிழக வெற்றி கழகத்தால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாவிட்டால் இந்த ஆட்சி கலைக்கப்பட்டு மீண்டும் தமிழ்நாட்டில் தேர்தல் நடத்துவதற்கு முன்பாக கவர்னர் ஆட்சி வரும் அப்படி ஒரு வேலை நடந்தாலும் அது தமிழக வெற்றி கழகத்திற்கு தான் சாதகமாக இருக்கும் என அரசியல் வல்லுநர்கள், மூத்த பத்திரிகையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கூட்டணி கட்சியினரின் தயவு இல்லாமல் தற்போது ஆட்சியை அமைத்து நடத்த முடியும் என்ற தகவலையும் சொல்கின்றனர்.

கூட்டணி மந்திரி சபை அமைக்க போகிறாரா அல்லது தைரியமாக சட்டமன்றத்தில் பெரும்பான்மைக்கு செல்ல போகிறாரா விஜய் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இந்த சமயம் பார்த்து மற்ற கட்சிகள் மந்திரி வாரியம் என பேரம் பேசி வருகின்றன இதற்கு ஒத்துழைப்பாரா என்பது மில்லியன் டாலர் கேள்வி.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments