Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

வெப்ப அலை வறட்சியிலிருந்து தோட்டக்கலை பயிர்களை பாதுகாக்கும் வழிமுறைகள்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடப்பாண்டு மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை, வெப்ப அலை வீசக்கூடும் எனவும் பருவமழை குறையக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது. எனவே, மேற்கண்ட நிலையினை எதிர்கொள்ளும் வகையில், விவசாயிகள் தங்களது பயிர்களை கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றி பாதுகாத்துக் கொள்ளலாம்.

நண்பகல் நேரங்களில் அதிகளவில் வெப்பஅலை வீசக்கூடும் என்பதால் நண்பகல் 12 மணி முதல் 3 வரை வயல்வெளியில் பணிகள் மேற்கொள்வதை விவசாயிகள் தவிர்க்க வேண்டும்.

நிலத்தடி நீர் குறையும் அபாயம் உள்ளதால், தற்போது உள்ள நீரினை தேவைக்கு அதிகமாக செலவிடாமல் முறையாக பயன்படுத்த வேண்டும்.

பாசன நீர் வீணாவதை தடுக்கும் வகையில், பயிர்களுக்கு நுண்ணீர் பாசனம் முறை மூலம் காலை அல்லது மாலை நேரங்களில் நீர் பாய்ச்ச வேண்டும்.

பயிர்களிலிருந்து அதிகபடியான நீர் ஆவியாகி வெளியேறுதலை தடுக்கும் வகையில், கயோலின் 3 சதம் அல்லது 2 சதம் டை அம்மோனியம் பாஸ்பேட் +1 சதம், பொட்டாசியம் குளோரைடை காலை அல்லது மாலை நேரங்களில் தெளிக்க வேண்டும்.

தோட்டக்கலை பயிர்களை புதிதாக நடவு மேற்கொள்ளும் விவசாயிகள், வெப்பத்தினை தாங்கி வளரக்கூடிய ரகங்களை தேர்வு செய்து நடவு செய்ய வேண்டும்.

மேலும், நிலப்போர்வை மற்றும் நுண்ணீர் பாசன முறையினை பின்பற்ற வேண்டும்.

பல்லாண்டு பயிர்களான தென்னை, மா, கொய்யா,எலுமிச்சை போன்ற பயிர்களுக்கு முறையாக நுண்ணீர் பாசனம் அமைத்து, அங்கக நிலப்போர்வை மரங்களுக்கு அமைத்திட வேண்டும்.

அவ்வப்போது பயிர்களில் ஏற்படும் மாற்றத்தினை கண்காணிக்க வேண்டும்.

5 முதல் 6 மாதங்கள் வளரும் காய்கறி பயிர்களின் பரப்பு குறைத்து 2 முதல் 3 மாதங்களில் முடியும் காய்கறிளை அதிக அளவு பயிரிடலாம் என தெரிவிக்கப்படுகிறது.

மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. வே.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *