திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் முருங்கபேட்டை கிராமத்தில் வசிக்கும் சுரேஷ் த/பெ பன்னீர்செல்வம் அவர்களின் தென்னந்தோப்பில் முதலை ஒன்று இருப்பதாகவும் ஊர் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாவனம் முதலையை பிடிக்க சுரேஷ் என்பவர் அளித்த தகவலின் பேரில் முதலையை பாதுகாப்பாக பிடிக்க தலைமை வன பாதுகாவலர் R.காஞ்சனா IFS திருச்சி உத்தரவின் படி S.கிருத்திகா IFS மாவட்ட வன அலுவலர் திருச்சிராப்பள்ளி அறிவுரையின்

பேரில் V.P. சுப்பிரமணியம் வனச்சரக அலுவலர் திருச்சி மேற்பார்வையில் 5.5.2026 அன்று காலை சுமார் 8.30 மணியளவில் திருச்சி வனச்சரக பணியாளர்கள் மற்றும் தீயணைப்பு துறை திருச்சி பணியாளர்களும் இணைந்து முதலையை பாதுகாப்பாக பிடித்தனர். பிடிக்கப்பட்ட இந்த முதலையானது பத்து வயது உடைய பெண் முதலை ஆகும் . பிடிபட்ட பெண் முதலையானது சுமார் 500 கிலோ எடை கொண்டது மற்றும் 12 அடி நீளம் கொண்டது. பிடிக்கப்பட்ட முதலையை மாவட்ட வன அலுவலர் திருச்சி அவர்களின் உத்தரவின் பேரில் நல்ல நிலையில் அதன் வாழ்விடமான முக்கொம்பு காவிரி கொள்ளிடம் ஆற்றிக்கு எடுத்துச் சென்று பாதுகாப்பாக விடப்பட்டது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments