Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

தவெக பெண் தொண்டர் தாக்குதலுக்கு கடும் கண்டனம் – தவெக டெல்டா மண்டல கண்காணிப்பாளர் கு.ப.கிருஷ்ணன்

தவெக பெண் தொண்டர் தாக்குதலுக்கு
கடும் கண்டனம் -தவெக டெல்டா மண்டல கண்காணிப்பாளர் கு.ப.கிருஷ்ணன் பேட்டி.
திருச்சி கிழக்குத் தொகுதி அலுவலகத்தில் தவெக டெல்டா மண்டல கண்காணிப்பாளர் கு.ப.கிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர்
வரும் 19ம் தேதி திருச்சி கிழக்கு தொகுதிக்கு பரப்புரை மேற்கொள்ள தவெக தலைவர் விஜய் வருகிறார்.

தொகுதி முழுவதும் செல்ல தேர்தல் ஆணையத்தில் அனுமதி கோரி மனு விண்ணப்பித்துள்ளோம். திருச்சி கிழக்கு தொகுதியின் வேட்பாளர் விஜய் முறையில் தொகுதி முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கு தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருக்கிறோம் விரைவில் அனுமதி கிடைக்கும் என நம்புகிறோம்.தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் அறிக்கை படித்தவரை அது ஏழை மக்களுக்கான தேர்தல் அறிக்கை அனைத்து மக்களுக்கான தேர்தல் அறிக்கை இந்த தேர்தல் அறிக்கை நேற்று முதல் தமிழக மக்களின் பேசு பொருளாக உள்ளது.
தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி அமைத்தவுடன் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்.

மண்ணச்சநல்லூரில் கூப்பன் கொடுப்பதில் என்னை அவமானப்படுத்தி வார்த்தைகளில் திட்டி அவர் உயிரை பறித்துள்ளனர்.
இரண்டு நாட்களுக்கு முன்னதாக திருச்சி கிழக்கு தொகுதியில் கே கே நகர் காவல் நிலையத்தில் உட்பட்ட ஏர்போர்ட் செண்பகராம் தெருவில் தவெகவினர் வீடுவீடாக தேர்தல் பரப்புரை மேற்கொண்ட பொழுது பெண் தொண்டர் தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிப்பதாகவும் கொலைவெறி தாக்குதல் நடத்தியதை கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம். வீடு வீடாக நான்கு பேர் சென்று வாக்கு கேட்பதற்கு அனுமதி தேவையில்லை.வாக்கு சேகரிக்க விடாமல் காவல்துறை தடுப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் திருச்சி விமான நிலையத்தில் இருந்து வந்து தனது தொகுதிக்கு உட்பட்ட ஏர்போர்ட் மற்றும் அனைத்து இடங்களிலும் திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி பொதுமக்களையும் தொண்டர்களையும் பார்த்து கையசைத்தபடி வாக்கு சேகரிக்க உள்ளார் என தெரிவித்தார்.
ஒரு சில தொகுதிகளில் ஆளுங்கட்சியினர் எங்களது வேட்பாளர்களை மிரட்டுவதால் தேர்தல் பரப்புரை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதையும் தாண்டி பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். சிலரை விலைக்கு வாங்கவும் முயற்சிக்கின்றனர் தவெக வேட்பாளர்கள் தொண்டர்கள் எவரும் விலை போக மாட்டார்கள் என்றார்.
*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
*Instagram*
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *