Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

பிரச்சாரத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் வராதது ஏன் திருச்சியில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கேள்வி

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டம் தமிழகத் தலைவர் அண்ணாமலை தலைமையில் திருச்சியில் நடைபெற்றது. வேட்பாளர்களை அறிமுகம் செய்த பிறகு பேசிய அண்ணாமலை…. தமிழக திமுக ஆட்சி எடுக்காத முடிந்திருக்கிறது. 80 ஆண்டு காலம் தொடர்ந்து  ஒருவர் ஆட்சி செய்தால் என்ன சலிப்பு கோபம் வருமோ? அது இந்த எட்டு மாதத்தில் வந்திருக்கிறது. கொரோனா தொற்று முதலில் பரவிய போது மக்கள் அச்சத்திற்கு ஆளானார்கள். 

பாரத பிரதமர் ஊக்குவிப்பு காரணமாக நமது இந்திய விஞ்ஞானிகள் தடுப்பூசி கண்டுபிடித்து அதை நாமே உற்பத்தி செய்து இந்திய விமானப்படை மூலமாக சென்னைக்கு கொண்டு வந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. இதுவரை
162 கோடி தடுப்பூசி இந்த அரசு செலுத்தியுள்ளது. இந்த தடுப்பூசியால் எந்த பிரச்சினை என எந்த மாநிலமும் கூறவில்லை. பொங்கல் தொகுப்பு என தரமற்ற 21 பொருட்கள் அடங்கிய வெல்லம் உள்ளிட்ட தொகுப்பை தமிழக அரசு வழங்கியது.

பொய்யான வாக்குறுதிகளை கோரி தமிழக அரசு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. 2 கோடியே 15 லட்சம் மஞ்சள் பையை வாங்கி 120 கோடி கமிஷன் அடித்திருக்கிறது ஆளும் திமுக அரசு. பொங்கல் பரிசாக வழங்கப்பட்ட கருப்பை ஒரு கருப்பு 25 ரூபாய் என வாங்கி அதனை 40 ரூபாய்க்கு ரேஷன் கடைகளில் விற்றுள்ளனர் திமுக மாவட்ட செயலாளர்கள். மஞ்சத்தூள் மஞ்சப்பை கரும்பு உள்ளிட்ட அனைத்துப் பொருட்கள் கொள்முதலில் ஊழல் நடந்துள்ளது.

இதற்கு  யாரெல்லாம் காரணம் என கண்டறியப்பட்ட அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார்கள். ஆனால்  அமைச்சர்கள் தான் இதற்கு காரணம் என தெரியவந்ததால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. முழுமையாக 7 வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத அரசு இந்த உள்ளாட்சித் தேர்தலில் வாக்கு சேகரித்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்தை தேடி தேடி பாரத பிரதமர் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் சிட்டி திட்டம் கொடுத்தார். எந்த வேலையும் நடக்கவில்லை. திமுகவின் பட்டத்து இளவரசர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கரூக்கு வந்த  சாலையோர கடையில் டீ குடித்தார் என்று பொது மக்கள் கூறினார்கள். பல லட்ச ரூபாய் செலவு செய்து சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்து திருச்சியிலிருந்து கரூர் சென்று 4 ரூபாய்க்கு டீ குடித்தால் அவர் சாமானிய மனிதனா?

நம்முடைய முதல்வர் 12 பேருக்கு நீட் விவரம் குறித்து கடிதம் எழுதி ஒரு கடிதம் கூட திருப்பி மறு பதில் வரவில்லை. காய்ச்சலுக்கு Scan செய்ய சொன்னால்  அந்த மருத்துவர் தனியார் மருத்துவ கல்லூரியில் படித்தவர். காய்ச்சல் கண்டவருக்கு மாத்திரை கொடுத்தால் அவர் அரசு கல்லூரியில் பயின்றவர். நீட் தேர்வினால் ஏழை எளிய மாணவர்கள் மருத்துவராக வாய்ப்புள்ளது. நீட் தேர்வினால் தமிழக அரசுக்கு என்ன பிரச்சனை? தற்போது தமிழகத்தில் 11 அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தமிழக முதல்வருக்கு சரக்கும் இல்லை மிடுக்கும் இல்லை.

பாரதம் 75 என்ற தலைப்பில்தான் ஊர்திகள் வைக்கப்பட வேண்டும். தமிழக அரசு கருத்தில் கொள்ளாமல் செய்ததால் தான் ஊர்திகள் விஷயத்தில் தோல்வி கண்டுள்ளது. கதை, திரைக்கதை வசனத்தில் கைதேர்ந்தவர்கள் திமுகவினர். உண்மையான சாமானிய மக்களின் நலனுக்காக ஆட்சி நடைபெறவில்லை. 1956 முதல் நடைபெற்று வரும்   தேர்தல் பிரச்சாரத்திற்கு நிர்வாகத் தலைவர்கள் வராமல் இருந்துள்ளார்களா?
தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு வர அச்சப்படுகிறார். திருச்சி மாநகரத்தில் 65 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களில் 34 பேர் பெண்கள். இதில் இந்து, முஸ்லிம், கிருஸ்தவர்கள் பலரும் உள்ளனர். அனைத்து மதமும் முக்கியம் தான். அனைத்து மதங்களும் சமம் தான்.

ஒருபோதும் தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது என ராகுல் பேசியுள்ளார். குஜராத் தேர்தல் தொடர்பான தேர்தல் குறித்தும்  மோடி குறித்தும் பல்வேறு கருத்துக்களை ராகுல் காந்தி அப்போது கூறினார். ஆனால் கூற்று பொய்யானது. அதேபோன்று தமிழகத் தேர்தலில் பாஜக வெற்றி பெறாது என்று கூறியுள்ளார். ஆனால் அவரது கருத்தை பொய்யாக்கும் வகையில் பாஜக இமாலய வெற்றியை பெறும் என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh

#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *