Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சியில் இல்லம் தேடிக் கல்வி திட்டம் தொடர கோரிக்கை மனு

இன்று 01-06-2026 (திங்கள் கிழமை) திருச்சி மாவட்டத்தைச் சார்ந்த இல்லம் தேடிக் கல்வித் திட்ட தன்னார்வலர்கள் திட்டம் தொடர வேண்டி கோரிக்கை மனு அளித்தனர்.

அக்.27,2021-ல் அப்போதைய அரசால் துவங்கப்பட்ட இந்தத் திட்டமானது டிச,2021-ல் ஆயிரம் மையங்கள் 2 இலட்சம் தன்னார்வலர்கள் என 35 இலட்சம் மாணவ, மாணவியர்களுக்கு கொரோனா தொற்றின் காரணமாகஅறிவிக்கப்பட்டஊரடங்களில் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை (Education Gap) -யை சரிசெய்ய வெகுசிறப்பாக செயல்பட்டது. பள்ளி முடிந்து மாலையில் 2 மணிநேரம் இந்தத் திட்டம் செயல்பட்டது. கற்றல் உபகரணங்கள் மூலமும் எளிமையான செயல்முறைகள் மூலமும் கற்பிக்கப்பட்டதனால் குறைந்த காலத்திலேயே மாணவர்களிடையே ஏற்பட்ட கற்றல் இடைவெளி தவிடுபொடியானது.

மேலும் விளையாட்டு ,பாடல் என பொழுதுபோக்காகவும், செயல்முறையிலும் பாடம் கற்பிக்கப்பட்டதால் மாணவர்களிடையேயும், பெற்றோர்களிடையேயும் இத்திட்டம் பெரும் வரவேற்பை பெற்றது.

மே-2023 -ல் கொரோனா முழுமையாக கட்டுக்குள் வந்துவிட்டதாக உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவித்தை அடுத்தும் மற்றும் கற்றல் இடைவெளி குறைந்ததாலும் இல்லம் தேடிக் கல்வி 2.0 என்ற பெயரில் தொடர்ந்து செயல்பட்டது.இந்த சூழ்நிலையில் கடந்த 2025- 2026 கல்வியாண்டில் இத்திட்டத்தை நிறுத்துவதாக அரசு அறிவித்தது. தன்னார்வலர்களின் தொடர் கோரிக்கையின் விளைவாக 2025-2026-ம் கல்வியாண்டில் இல்லம் தேடிக் கல்வி 3.0 எனதொடரப்பட்டது.

இவ்வாறாக இந்தத் திட்டம் 5 வருடங்களை பூர்த்தி செய்துள்ளது.மேலும், இந்த 2026 – 2027-ம் கல்வியாண்டில் இந்தத் திட்டம் குறித்த எந்த அறிவிப்பும் வெளிவராத நிலையில் கொரோனா காலத்தில் மட்டுமல்லாமல் ,எல்லாநேரத்திலும்மாணவ,மாணவியர்கள் கல்வி கற்றலுக்கு உற்ற நண்பனாக இருக்கும் இந்தத் திட்டத்தை புதிய அரசு தொடர வேண்டும் என தமிழக அரசையும், பள்ளிக்கல்வித்துறையையும் திருச்சி மாவட்ட தன்னார்வலர்கள் சார்பாக கேட்டுகொள்கிறோம்.

 

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

 

 

 

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *