திருச்சி அரசு மருத்துவமனையில் மூளை சாவு அடைந்தவரின் உடல் உறுப்புக்கள் தானம்

Jul 8, 2025 - 12:56
Jul 8, 2025 - 15:30
 0  280
திருச்சி அரசு மருத்துவமனையில் மூளை சாவு அடைந்தவரின் உடல் உறுப்புக்கள் தானம்

திருச்சிராப்பள்ளி, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மூளை சாவு அடைந்த ஒருவரின் உடலில் இருந்து கல்லீரல் மற்றும் இரண்டு சிறுநீரகங்கள் தானமாக இன்று (08.07.2025) பெறப்பட்டது. இதுபோன்ற நிகழ்வு 22-வது முறையாக நடக்கிறது.

திண்டுக்கல் மாவட்டம், க.சின்னத்தம்பிபட்டி சேர்ந்த 26 வயது மதிக்கத்தக்க ஆண், மூளைத் தண்டுவடத்தில் இரத்த கசிவு ஏற்பட்டு திருச்சிராப்பள்ளி, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் 06.07.2025 அன்று காலை 03.30 மணி அளவில் அனுமதிக்கப்பட்டார். பல்வேறு மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாமல் 06.07.2025 அன்று இரவு 11.46 மணிக்கு அவர் மூளைச்சாவு அடைந்தார். இந்த மூளைச்சாவு மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டு, அவரது உறவினர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

 இதனை உணர்ந்த இறந்தவரின் உறவினர்கள் முழுமனதுடன் அவருடைய உடல் உறுப்புகளை தானம் அளிக்க முன் வந்தார்கள். மேலும் தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி அவருடைய உறுப்புகளான கல்லீரல் மற்றும் இரண்டு சிறுநீரகங்கள் தானமாக பெறப்பட்டது.Transtan வழிகாட்டுதலின்படி, உடல் உறுப்பு வேண்டி பதிவு செய்தவர்களின் வரிசையின்படி, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் இரண்டு வருடங்களாக தொடர்ச்சியாக இரத்த சுத்திகரிப்பு சிகிச்சை பெற்று வந்த 31 வயது மதிக்கத்தக்க நோயாளிக்கு 08.07.2025 அன்று

 இம்மருத்துவமனை முதல்வர் ..., MS., Ortho., D.Ortho., DNB Ortho., Ph.D., ACME अक தலைமையில் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவக்குழு மூலம் இந்த அறுவை சிகிச்சை, சிறுநீரக அறுவை சிகிச்சை மரு.ஜெயபிரகாஷ் நாராயணன், MS., Mch., மற்றும் குழுவினர், சிறுநீரக மருத்துவ குழு மருத்துவர் மரு.நூர்முகமது, MD., DM., மற்றும் குழுவினர், மயக்கவியல் மருத்துவர்

 மரு.சந்திரன், MD, மற்றும் குழுவினர் மற்றும் செவியலியா குழு, செவிலியர் உதவியாளர் குழு ஆகியோர் மூலம் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் முற்றிலும் இலவசமாக, மாற்று சிறுநீரகம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டு நோயாளி நலமுடன் உள்ளார். இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையானது நமது மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 42-வது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஆகும்.

மற்றொரு சிறுநீரகம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கும், கல்லீரல் தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கும் தானமாக வழங்கப்பட்டது. உடல் உறுப்பு தானம் செய்த கொடையாளிக்கு இம்மருத்துவமனை முதல்வர் அவர்கள் தலைமையில் அரசு மரியாதை செய்யப்பட்டு வழியனுப்பப்பட்டது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

 

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0