திருச்சி மாவட்டத்தில் அருட்தந்தை ஸ்டேன் சாமிசிலை திறப்பு

கழக துணைப் பொதுச்செயலாளர் - தி.மு.க நாடாளுமன்ற குழுத்தலைவர் கனிமொழி அவர்களும், வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி அவர்களும் பழங்குடியின மக்களுக்காக போராடிய அருட்தந்தை. ஸ்டேன் சாமி அவர்களின் சிலையை
திருச்சி மாவட்டம், விரகானூரில் திறந்து வைத்தார்கள். இதையொட்டி தமிழக ஆயர்களின் கூட்டுத் தலைமை ஏற்பாட்டில் நடைபெற்ற சனநாயக எழுச்சி மாநாட்டை திருச்சி(தெ) மாவட்ட தி.மு.க செயலாளர் - அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் உரையாற்றி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர்
சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் முத்தரசன், காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுச்சாமி, திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் வைரமணி, சட்டமன்ற உறுப்பினர் சவுந்தரரபாண்டியண், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்
தலைவர் இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ, பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய...
https://www.threads.net/@trichy_vision
What's Your Reaction?






