2026ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்றத் தொகுதிகளில் பணியாற்ற உள்ள வாக்குப்பதிவு நிலைய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி முகாம்கள் மாவட்டம் முழுவதும் நடைபெற்றன.

மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சியில், உதவி தேர்தல் அலுவலர்கள், வட்டாட்சியர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்று, தேர்தல் நடைமுறைகள் குறித்த விரிவான விளக்கங்களை வழங்கினர்.இரண்டாம் கட்ட சீர்முறை (Second Randomization) அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட பணியாளர்களுக்கு, 10.04.2026 முதல் 15.04.2026 வரை தொடர்ந்து பயிற்சிகள் அளிக்கப்பட்டன.மணப்பாறை (138), ஸ்ரீரங்கம் (139), திருச்சிராப்பள்ளி மேற்கு (140), திருச்சிராப்பள்ளி கிழக்கு (141), திருவெறும்பூர் (142), இலால்குடி (143), மணச்சநல்லூர் (144), முசிறி (145), துறையூர் (146) ஆகிய தொகுதிகளில் தனித்தனியாக பயிற்சி முகாம்கள் நடைபெற்றன.

இந்த பயிற்சிகளில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) மற்றும் VVPAT பயன்படுத்தும் முறை, வாக்குச்சாவடி அமைப்பு, வாக்காளர்களை கையாளும் விதிமுறைகள், தேர்தல் நாளில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் உள்ளிட்டவை குறித்து முழுமையான விளக்கங்கள் வழங்கப்பட்டன. மேலும், செயல்முறை (practical) பயிற்சியும் அளிக்கப்பட்டது.வாக்குப்பதிவு நாளில் ஏற்படக்கூடிய சவால்களை சமாளிக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் வழிகாட்டினர்.

இந்த பயிற்சிகள் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி முறையாக நடைபெற்று வருவதாகவும், அனைத்து பணியாளர்களும் தேர்தல் பணிக்குத் தயாராக உள்ளனர் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
*Instagram*
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav
திருச்சியில் தேர்தல் பணியாளர் பயிற்சி தீவிரம்



Comments