சட்டமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் இன்று தபால் வாக்கினை செலுத்தி வருகின்றனர்.திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட தெப்பக்குளம் பிஷப்ஹீபர் மேல்நிலைப்பள்ளி கிழக்கு தொகுதி எம்எல்ஏவும், திமுக வேட்பாளருமான இனிகோ இருதயராஜ் வாக்குச்சாவடி மையத்தில் சென்று அரசு

ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் ஆதரவு திரட்டியதாக கூறப்படுகிறது, இதற்கு ஆசிரியர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்ததால் சட்டென்று அங்கிருந்து புறப்பட்டுச் சென்றதால் தபால் வாக்கு செலுத்தும் மையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக அவர் காரில் வந்த பொழுது உடன் 50க்கும் மேற்பட்ட திமுகவினர் கூட்டமாக தபால் வாக்கு பதிவு செய்யும் மையத்திற்கு உள்ளே சென்றதாக ஆசிரியர்கள் குற்றச்சாட்டை முன்வைத்ததுள்ளனர். வேட்பாளர் வாக்குப்பதிவை நேரில் பார்க்க அனுமதி உண்டு. ஆனால் இவ்வளவு பேர் கூட்டமாக வந்து உள்ளே வருவதற்கு அனுமதி கிடையாது. அவர் வாக்கு சேகரித்து இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

திருச்சி கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஆசிரியர்கள் புகார் தெரிவித்தனர் எப்படி 50க்கும் மேற்பட்டோர் கூட்டமாக நாங்கள் வாக்கு பதிவு செய்யும் மையத்திற்குள் வந்தார்கள் என கேள்வி எழுப்பினர் வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்யும் இடங்கள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் வாக்குப்பதிவு மையங்களுக்குள் வேட்பாளர் வரலாம் ஆனால் அதற்கான விதிமுறைகள் உள்ளது என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
*Instagram*
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments