திருச்சியில் நாளை (06.07.2024) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சியில் நாளை (06.07.2024) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி அம்பிகாபுரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அரியமங்கலம், எஸ்.ஐ.டி., அம்பிகாபுரம், ரயில்நகர், நேருஜிநகர், காமராஜ்நகர், மலையப்ப நகர், ராணுவகாலனி, பாப்பாக்குறிச்சி, கைலாஷ் நகர், சக்திநகர், ராஜப்பாநகர், எம்ஜிஆர் நகர், சங்கிலியாண்டபுரம், பாலாஜிநகர்,

மேலக்கல் கண்டார்கோட்டை, கீழக்கல்கண்டார் கோட்டை, கொட்டப்பட்டு, அரியமங்கலம் தொழிற் பேட்டை, சிட்கோகாலனி, காட்டூர், திருநகர், நத்தமாடிப்பட்டி, கீழக்குறிச்சி, ஆலத்தூர், பொன்மலை, செந்தண்ணீர்புரம் ஆகிய பகுதி களில் நாளை (6ம் தேதி) காலை 9:45 முதல் மாலை 4:00 மணிவரை மின்வினியோகம் இருக்காது என மின்வாரிய திருச்சி கிழக்கு கோட்ட செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.

மன்னார்புரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் நாளை (06.07.2024) காலை 10:00 மணி முதல் பகல் 1:00 மணி வரை மன்னார்புரம், டிவிஎஸ் டோல்கேட், உல கநாதபுரம், என்.எம்.கே காலனி, உஸ்மான் அலி தெரு, சேதுராமன் பிள்ளைகாலனி, ராமகிருஷ்ணா நகர், முடுக்குப்பட்டி, கல்லுக்குழி, சுப்ரமணியபுரம், சுந்தர்ராஜ் நகர், ஹைவேஸ் காலனி, ரஞ்சிதபுரம், அண்ணாநகர், செங்குளம் காலனி பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.

இதே போல் கே.சாத்தனூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (சனிக்கிழமை) காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை கே.கே.நகர், இந்தியன் பேங்க் காலனி, காஜாமலை காலனி, எஸ்.எம்.இ.எஸ்.இ.காலனி, கிருஷ்ணமூர்த்திநகர், சுந்தர்நகர், அய்யப்பநகர், எல்.ஐ.சி.காலனி, பழனிநகர், முல்லைநகர், ஓலையூர், இச்சிகாமாலைப்பட்டி, மன்னார்புரம் ஒரு பகுதி, சிம்கோ காலனி,

அகிலாண்டேஸ்வரிநகர், ஆர்.வி.எஸ்.நகர், வயர்லெஸ்ரோடு, செம்பட்டுபகுதி குடித்தெரு பாரதிநகர், காமராஜ்நகர், ஜே.கே.நகர், சந்தோஷ்நகர், ஆனந்த்தகர், கே.சாத்தனூர், வடுகப்பட்டி, பாரிநகர், காஜாநகர், ஆர்.எஸ்.புரம், டி.எஸ்.என்.அவென்யூ ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision