தூய்மை பணிகளுக்கு தீர்வு காண swachhata செயலி

தூய்மை பணிகளுக்கு தீர்வு காண swachhata செயலி

 தூய்மையான பாரதம் திட்டத்தின் கீழ் உள்ளாட்சி அமைப்புகள் ஏற்கெனவே ஏராளமான நடவடிக்கைகளை எடுத்து வருவதால், கழிவுகள் அகற்றுதல், அதைச் சார்ந்த பணிகளை நல்ல முறையில் திட்டமிடுதல், அவற்றை செயல்படுத்துதல் ஆகியவற்றிற்கு Swachhata செயலிஉதவியாக இருக்கின்றன. 

 Swachhata செயலியின் உதவியால் மாநகராட்சிகள் போன்ற உள்ளாட்சி அமைப்புகள் பொது மக்களின் குறைகளை விரைவில் தீர்த்து வருகின்றன.

 தூய்மையான பாரதம் (நகர்ப்புறம்) திட்டத்தின் வரம்புக்கு உள்பட்ட விஷயங்களில் பொது மக்களின் குறைதீர்வுக்கு ஏற்றவகையில் பிரபலமானதாக இந்தச் செயலி உள்ளது. நாடு முழுக்க 1.7 கோடி பேர் இதைப் பயன்படுத்தி வருகின்றனர்.

 swachata செயலி மூலம் எந்த நபரும் எளிதாகப் புகார்களைத் தெரிவித்து, நிவர்த்தி செய்து கொள்ள முடியும் என்பதால் இது மக்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.

குடிமக்கள் எந்தப் பிரிவிலும் தங்கள் குறைகளைப் பதிவு செய்யலாம்.   

திருச்சி மாநகராட்சியில் உள்ள அனைத்து பொதுமக்களும் இந்த செயலியின் மூலம் கழிவுநீர் அகற்றுதல், பாதாள சாக்கடைகளில் ஏற்படும் பாதிப்பு, குப்பைத்தொட்டி தூய்மை இல்லாமல் இருத்தல்,தூய்மை பராமரிப்பில் ஈடுபடாமல் இருத்தல், விலங்குகளில் இருந்து கிடைப்பது அறிவித்தல், பொது கழிப்பறைகள் சுத்தம் செய்தல், அங்கு ஏற்படும் அடைப்புகள் குறித்த புகார்களுக்கு, பொது கழிப்பறைகளில் தண்ணீர் , மின்சாரம் ஆகியவை குறித்த பிரச்சினைகள் இருப்பின் புகார்கள் அளிக்க இந்த செயலியை பயன்படுத்தலாம்.

 உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள், தூய்மை பணியாளர்கள் மூலம் விரைந்து பொதுமக்களுக்கு தீர்வளித்து வருகின்றனர்.

https://play.google.com/store/apps/details?id=com.ichangemycity.swachhbharat

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...

https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO