நோ என்ட்ரியில் செல்லும் ஏராளமான வாகனங்கள் போக்குவரத்து நெரிசலால் விபத்து நடவடிக்கை எடுப்பாரா மாநகர காவல் ஆணையர்?

நோ என்ட்ரியில் செல்லும் ஏராளமான வாகனங்கள் போக்குவரத்து நெரிசலால் விபத்து நடவடிக்கை எடுப்பாரா மாநகர காவல் ஆணையர்?
திருச்சி பாலக்கரை அருகே உள்ள பிரபாத் ரவுண்டானாவில் சத்திரம் பேருந்து நிலையம் ,காந்தி மார்க்கெட், தென்னூர் கண்ட்டோன்மென்ட் பகுதியில் இருந்து வாகனங்கள் சந்திக்கும் முக்கியமான சந்திப்பு பகுதி. இதில் சப் ஜெயில் சாலைக்கும் காந்தி மார்க்கெட்டில் இருந்து வரக்கூடிய சாலைக்கும் நடுவில் ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது.
காந்தி மார்க்கெட்டில் இருந்து வரும் வாகனங்கள் ஒருவழிப் பாதையாகவும். ரவுண்டானவில் இருந்து சப் ஜெயில் சாலையில் செல்லக்கூடிய பகுதியில் ஒரு வழி பாதை ஆகவும் உள்ளது. ஏராளமான வாகனங்கள் காந்தி மார்க்கெட் பகுதியில் இருந்து வரும் வாகனங்களை எதிர்த்து நோ என்ட்ரியில் இரு சக்கர வாகனங்கள் கார்கள் என ஏராளமானவை செல்கின்றன. அந்தப் பகுதியில் வணிக நிறுவனங்கள், உணவகங்கள் உள்ளிட்டவையில் உள்ளது, அப்பகுதி மிகுந்த போக்குவரத்து நெரிசலுடன் காணப்படுகிறது.
போக்குவரத்து காவல்துறையினர் இதனை கண்டு கொள்வதே இல்லை நோ என்ட்ரி பலகை வைத்தும் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் யாரும் சாலை விதிகளை மதிப்பதில்லை,இதனால் விபத்துக்கள் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலால் பகல் நேரங்களில் வாகனங்கள் சிக்கி தவிக்கின்றன. அப்பகுதிக்கு வணிக நிறுவனங்களுக்கு வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு இடமில்லாத நிலை
ஏற்படுகிறது. பேருந்து நிறுத்தமும் அப்பகுதியில் உள்ளது சிறிது நேரம் பேருந்து நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்வதற்குள் மிகப்பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. உடனடியாக மாநகர காவல் ஆணையர் போக்குவரத்து காவல்துறையினருக்கு உத்தரவிட்டு நோ என்ட்ரில் வரும் வாகனங்கள் மீது அபராதம் வசூலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் இந்த பகுதி எந்நேரமும் போக்குவரத்து நெரிசலில் தான் சிக்கி தவிக்கும் என அப்பகுதியில் உள்ள வணிக நிறுவன உரிமையாளர்கள், பொதுமக்கள் குறிப்பிடுகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision