30க்கும் மேற்பட்ட கிளைகள் - 1 மில்லியன் வாடிக்கையாளர்கள் - 113வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திருச்சி B.G நாயுடு ஸ்வீட்ஸ்!!

30க்கும் மேற்பட்ட கிளைகள் - 1 மில்லியன் வாடிக்கையாளர்கள் - 113வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திருச்சி B.G நாயுடு ஸ்வீட்ஸ்!!

வணிகத்திற்கு எப்போதுமே தனி சிறப்பு உண்டு. பண்டமாற்று முறையில் தொடங்கி இன்று பண பரிவர்த்தனைகள் வரை பல்வேறு பரிமாற்றங்களை பெற்று வளர்ச்சியடைந்த ஒன்று வணிகம். சுமார் 100 வருடங்களுக்கு முன்பாக ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த காலம் அது. அப்போதைய சிராப்பள்ளியில் பாலக்கரை பகுதியில் கூரைக்கடை ஒன்றில் வயதான நைனா ஒருவர் பூந்தியை சின்ன கூடையில் போட்டு அன்றைய சிறுவர்களிடம் கொடுத்த காட்சியை இன்றைக்கு பெரியவர்களாக இருப்பவர்கள் பலரிடமும் சொல்லி மகிழ்வார்கள்.

ஆம், திருச்சியில் 100 வருடம் மேல் பாரம்பரியமிக்க கடை என்றால் சட்டென நினைவுக்கு வருவது B.G நாயுடு ஸ்வீட்ஸ் தான். அன்று தொடங்கிய பயணம் இன்று தனது 113வது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறது.

காலங்கள் மாறினாலும், அதன் சுவை 100 ஆண்டுகளை கடந்தும் இன்றளவும் இருந்து வருவதாக பல வாடிக்கையாளர்கள் மனதார வாழ்த்தி செல்லும் காட்சியை நாம் பார்க்க முடிகிறது. இனிப்புகளின் பெருமையை திருச்சியில் தொடங்கி புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை, பெரம்பலூர், திண்டுக்கல், மதுரை என பல மாவட்ட மக்களின் மனதைக் கவர்ந்து வருகிறது. முப்பதுக்கும் மேற்பட்ட கிளைகளுடன் ஒரு மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை தன்வசப்படுத்தி உள்ளனர்.

5 மாவட்டங்களில் உள்ள மக்களின் ஒவ்வொருவரின் குடும்பத்திலும் இனிப்புகளாக விழாக்காலங்களில் பங்கேற்கும் நம்முடைய திருச்சியை சேர்ந்த B.G நாயுடு நிறுவனம் தற்போது 113 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றனர். இதோடு சேர்த்து இதன் உரிமையாளர் பாலாஜி அவர்களுக்கு இன்று பிறந்தநாள் என்பது கூடுதல் சிறப்பு.