"தேர்தல் நெருங்கி விட்டதால் விவசாய கடனை அதிமுக அரசு தள்ளுபடி செய்தது" - திருச்சி மாநாட்டில் K.S அழகிரி கடும் தாக்கு!!

"தேர்தல் நெருங்கி விட்டதால் விவசாய கடனை அதிமுக அரசு தள்ளுபடி செய்தது" - திருச்சி மாநாட்டில் K.S  அழகிரி கடும் தாக்கு!!

Advertisement

தேர்தல் தேதி நெருங்கி விட்டதால் ஒட்டு வங்கியை கருத்தில் கொண்டே விவசாயக் கடன்களை அதிமுக அரசு தள்ளுபடி செய்துள்ளதாக திருச்சி மாவட்டம் முசிறியில் நடைபெற்ற விவசாயிகள் சங்கமம் ஏர் கலப்பை பேரணி பொதுக்கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் K.S. அழகிரி கடும் தாக்கு 

Advertisement

திருச்சி மாவட்டம் முசிறியில் விவசாயிகள் சங்கம் ஏர்கலப்பை பேரணி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய கே எஸ் அழகிரி.... "மன்மோகன் சிங், ப.சிதம்பரத்தால் தான் 100 நாள் வேலை திட்டம் கிடைத்தது. ஏழை விவசாயிகளுக்கு அரசின் திட்டங்கள் சென்றடையவில்லை என்பதால் தான் 100 நாள் வேலை திட்டம் கொண்டு வரப்பட்டது. ஏழைகளின் வாழ்வாதாரம் இது போன்ற திட்டங்களால் தான் வளர்ச்சி பெறும்.

காங்கிரசால் மட்டுமே ஆட்சியை கொண்டுவர இயலும். இந்த 3 புதிய வேளாண் சட்டங்கள் மோடியின் நெருக்கமான சில நண்பர்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும். அரசின் பொதுத் துறை நிறுவனமான BSNL மோடியின் நடவடிக்கையால் பெரிய இழப்பை சந்தித்தன. Jio மட்டுமே வளர்ச்சி கண்டு வருகிறது. LIC போன்ற

பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்று வருகிறார் மோடி.

Advertisement

ஆளும் அதிமுக அரசு 2500 கோடி ரூபாய் அளவிற்கு டெண்டர் விட்டது. அதிமுக கூட்டணியில் பாஜ அங்கம் வகிப்பதால் தான் CBI இதில் விசாரணை மேற்கொள்ள முட்டுக்கட்டை போட்டு வருகிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதி 7000 கோடி விவசாயக் கடனை தள்ளுபடி செய்தார். விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு கடனை தள்ளுபடி செய்தார் ஆனால் தேர்தல் தேதி நெருங்கி விட்டதால் ஒட்டு வங்கியை கருத்தில் கொண்டே 12000 கோடி ரூபாய் விவசாயக் கடனை ஆளும் அதிமுக தள்ளுபடி செய்துள்ளதாக குற்றம் சாட்டினார்.