திருவரம்பூர் அருகே சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட இருவர் கைது- இருவர் தப்பி ஓட்டம்

திருவெறும்பூர் அருகே உள்ள மலைக்கோவில் சோலா அவன்யூ பகுதியில் மர்ம நபர்கள் மது அருந்திவிட்டு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாகவும் கேட்பவர்களை தகாத வார்த்தையால் திட்டி மிரட்டுவதாகவும் அதனால் பாதுகாப்பு கேட்டு நலச்சங்கத்தினர் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
திருச்சி மாநகராட்சியின் 40 வது வார்டுக்கு உட்பட்ட பகுதி திருவெறும்பூர் மலை கோவில் பகுதியில் உள்ள சோலா அவன்யூ பகுதியாகும். இங்கு சுமார் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இந்நிலையில் இரவு நேரங்களில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் மதுஅருந்தி வருவதும், சமுக விரோத செயல்களில் ஈடுபடுவதும் வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 10:30 மணி அளவில் அடையாளம் தெரியாத சுமார் 8 பேர் கொண்ட கும்பல் மது அருந்திவிட்டு தகாக வார்த்தைகளில் ஒருவரை ஒருவர் சத்தமாக பேசிகொண்டிருந்து உள்ளனர்.இதனை கேட்ட அப்பகுதியை சேர்ந்தவர்களையும் தகாத வார்த்தைகளாலும், ஆபாசமாகவும் திட்டியோதோடு மிரட்டல் விடுத்துள்ளனர்
இது சம்பந்தமாக உடனடியாக அப்பகுதி மக்கள் திருவெறும்பூர் காவல்துறைக்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து அங்கிருந்து தப்பிச்சென்றனர்.அவர்களின் இரண்டு பேரை பொதுமக்கள் பிடித்து இரவு நேர ரோந்து பணியில் இருந்த திருவெறும்பூர் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.மற்றவர்கள் பொதுமக்களிடம் சிக்காமல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
எனவே தப்பி ஓடியவர்கள் மூலம் தங்களுக்கு ஆபத்து ஏற்படக்கூடும். எனவே, தப்பி ஓடியவர்களைகைது செய்து நடவடிக்கை எடுப்பதோடு இதுபோன்று ஒரு சம்பவம் தங்கள் பகுதியில் மீண்டும் நடக்காமல் இருப்பதற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் தப்பி ஒடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision