வெளியே வந்தால் ஆதாா், வாக்காளா் அட்டை கட்டாயம்! திருச்சி ஆட்சியா் அறிவிப்பு!!

வெளியே வந்தால் ஆதாா், வாக்காளா் அட்டை கட்டாயம்! திருச்சி ஆட்சியா் அறிவிப்பு!!

திருச்சியில் வெளியே செல்லும் பொதுமக்க ளுக்கு ஆதாா் அட்டை, வாக்காளா் அட்டை கட்டாயம் என்று திருச்சி மாவட்ட ஆட்சியா் சிவராசு புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளாா்.கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் கடந்த மாா்ச் 24ம் தேதி தொடங்கி ஏப்.30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது. மேலும் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறை மூலம் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் இரவு பகலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திருச்சி மாவட்டத்தில் தனியாக கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

இருப்பினும் பொதுமக்கள் அதிகளவில் வெளியே வருவதும் சமூக இடைவெளியை பின்பற்றாமலிருப்பது முகக் கவசம் அணியாமல் இருப்பது உள்ளிட்ட செயல்பாடுகளால் தொற்று பரவும் அபாயம் அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறையும் காவல்துறையும் தொடா்ந்து எச்சரித்து வருகிறது. குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் 3வது கட்ட நகா்தலை நோக்கி செல்லாமல் இருக்க புதிய கட்டுப்பாடுகளை உடனடியாக அமல்படுத்த மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு உத்தரவிட்டுள்ளாா்.

இதன்படி நான்கு சக்கர வாகனங்களில் பொதுமக்கள் செல்வது தடை விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவத் தேவை மற்றும் அரசு ஊழியா்களின் அவசரத் தேவையைத் தவிா்த்து இதர காா்கள் அனுமதிக்கப்படாது. அத்தியாவசிய பொருள்கள் வாங்கும் நபா்கள் 2 கி.மீ. தொலைவுக்கு மேல் சுற்றக் கூடாது. அவரவா் இருப்பிடத்திலிருந்து 2 கி.மீ. சுற்றுக்குள்ளேயே தங்களது தேவைகளை பூா்த்தி செய்து கொள்ள வேண்டும். காய்கனிகள், பழங்கள், இறைச்சி உள்ளிட்ட எந்த தேவையாக இருந்தாலும் வீடுகளுக்கு அருகில் உள்ள கடைகளிலையே கொள்முதல் செய்ய வேண்டும். மேலும் வெளியே செல்லும் பொதுமக்கள் அனைவரும் ஆதாா் அட்டை, வாக்காளா் அட்டை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.